Published : Sep 09, 2026, 06:33 AM ISTUpdated : Sep 09, 2026, 06:41 AM IST
Gratuity Rules: மத்திய அரசு கிராவிட்டி விதிகளில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஒப்பந்த ஊழியர்கள் இனி ஒரு வருடம் வேலை பார்த்தாலே கிராவிட்டி வாங்கலாம். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நிரந்தர ஊழியர்களுக்கு இந்த விதி பொருந்தாது. அவர்கள் கிராவிட்டி பெற, முன்பு போலவே ஒரு நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி இருக்க வேண்டும். அடிக்கடி வேலை மாறும் இளம் தலைமுறை ஊழியர்களுக்கு இது பெரிய நன்மை. முன்பு 5 வருடங்களுக்குள் வேலையை விட்டால் கிராவிட்டி கிடைக்காது. இனி, ஓராண்டு உழைப்புக்கும் பலன் கிடைக்கும்.
25
நிரந்தர ஊழியர்களுக்கு விதிமுறைகளில் மாற்றம் இல்லை
கிராவிட்டி செலுத்துதல் சட்டத்தின்படி, நேர்மையாகப் பணியாற்றும் ஊழியரின் கிராவிட்டி பணத்தை நிறுவனம் எந்தக் காரணமும் இல்லாமல் நிறுத்தி வைக்க முடியாது. உடல்ரீதியான தாக்குதல், தகாத வார்த்தைகள் பேசுவது, பாலியல் துன்புறுத்தல் போன்ற பெரிய தவறுகளில் ஈடுபட்டால், நிர்வாகம் ஊழியரின் கிராவிட்டி பணத்தை நிறுத்தி வைக்கலாம்.
35
இளம் தலைமுறைக்கு பெரிய லாபம்
ஒரு ஊழியரின் கவனக்குறைவால் அல்லது வேண்டுமென்றே செய்த தவறால் நிறுவனத்திற்குப் பெரிய நிதி இழப்பு ஏற்பட்டால், அந்த இழப்பை ஈடுசெய்ய கிராவிட்டி தொகையிலிருந்து பிடித்தம் செய்ய நிறுவனத்திற்கு உரிமை உண்டு. மோசடி, லஞ்சம், ஆவணங்களைத் திருத்துதல், திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஊழியரின் முழு கிராவிட்டி தொகையையும் நிறுவனம் பறிமுதல் செய்யலாம்.
நேர்மையான ஊழியரின் பணத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை
ஊழியர் மீது குற்றச்சாட்டு இருந்தாலும், நிறுவனம் தன்னிச்சையாக பணத்தை நிறுத்த முடியாது. முதலில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் (Show-cause notice) அனுப்ப வேண்டும். நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தைத் தாண்டி, கூடுதலாகப் பணத்தைப் பிடிக்க முடியாது. மீதமுள்ள கிராவிட்டி தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் ஊழியருக்குக் கொடுப்பது நிறுவனத்தின் சட்டப்பூர்வ கடமை.
55
மாதாந்திர சம்பள அமைப்பில் மாற்றம்
புதிய தொழிலாளர் விதிகளின்படி, ஒரு ஊழியரின் மொத்தச் சம்பளத்தில் (Cost to Company - CTC) அடிப்படைச் சம்பளம் (Basic Pay) மற்றும் அகவிலைப்படி (DA) ஆகியவை குறைந்தபட்சம் 50 சதவீதமாக இருக்க வேண்டும்.
இதன் காரணமாக ஊழியர்களின் மாதாந்திர அடிப்படைச் சம்பளம் உயரும். அடிப்படைச் சம்பளத்தைக் கணக்கிட்டே கிராஜுவிட்டி வழங்கப்படுவதால், ஊழியர்கள் பணிநிறைவு பெறும்போது அவர்களுக்குக் கிடைக்கும் மொத்தக் கிராஜுவிட்டி தொகை கணிசமாக அதிகரிக்கும்.
வரி விலக்கு வரம்பு உயர்வு: தொழிலாளர்களின் நிதிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அரசு சாரா ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி தொகையின் மீதான வருமான வரி விலக்கு வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளது. கிராஜுவிட்டி கணக்கிடும் சூத்திரம்: கிராஜுவிட்டி தொகை என்பது ஊழியர் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டிற்கும் 15 நாட்கள் சம்பளத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
காலக்கெடு மற்றும் தாமதத்திற்கான வட்டி
ஒரு ஊழியர் நிறுவனத்திலிருந்து விலகிய அல்லது பணி ஓய்வு பெற்ற 30 நாட்களுக்குள் கிராஜுவிட்டி தொகையை நிறுவனம் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதற்குரிய வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்பது சட்டப்பூர்வ கடமையாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.