மத்திய அரசின் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகள் இயற்கை முறையில் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.50,000 வரை மானியம் பெறலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, இயற்கை உரங்கள், கரிம பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பெறலாம்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா (Paramparagat Krishi Vikas Yojana – PKVY) என்ற திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் இயற்கை முறையில் சாகுபடி செய்து, நிலத்தினை ரசாயன மருந்துகளின்றி பாதுகாக்க முடியும்.
27
ரூ.50,000 நிதி உதவி
இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50,000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில், சுமார் 62% தொகை இயற்கை உரம், கரிம பூச்சிக்கொல்லிகள், மண்புழு உரம் போன்றவற்றைப் பெற பயன்படுகிறது. இதுவரை மத்திய அரசு ரூ.1,197 கோடி செலவிட்டு விவசாயிகளுக்கு உதவியுள்ளது.
இயற்கை விவசாய மானியத்துக்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும்
பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா அதிகாரப்பூர்வ இணையதளம் சென்றால், முகப்புப் பக்கத்தில் Apply என்ற விருப்பம் இருக்கும்.
அதில் கிளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தைத் திறக்கலாம்.
விண்ணப்பத்தில் பெயர், தொலைபேசி எண், முகவரி, மின்னஞ்சல் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
தேவையான ஆவணங்களை (பிடிஎஃப் அல்லது ஜெபிஇஜ் வடிவில்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பின்னர் Submit என்பதை கிளிக் செய்யவேண்டும்.
பதிவு வெற்றியடைந்ததும், விண்ணப்ப எண் எஸ்எம்எஸ் மூலமாக உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும். அதை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்
67
நன்மைகள்
இயற்கை உரங்கள் பயன்பாடு அதிகரிக்கும்.
நிலத்தின் தன்மை பாதுகாக்கப்படும்.
விவசாயிகளின் செலவு குறையும்.
பயிர்களின் தரம் மேம்படும்.
77
ஆரோக்கியத்தை அறுவடை செய்யும் விவசாயிகள்
இயற்கை விவசாயம் மூலம் ஆரோக்கியமான உணவு மற்றும் நிலைத்த சுற்றுச்சூழலை உருவாக்கலாம். விருப்பமுள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பித்து ஆதாயம் பெறலாம்.