Gold Rate: பட்ஜெட் நாளில் தங்கம் வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுமா?

Published : Feb 01, 2026, 10:24 AM IST

Gold:இன்று மத்திய பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுமா. 

PREV
16
புதிய உச்சத்தில் தங்கம் விலை

தங்கம், வெள்ளி விலை போட்டா போட்டிக்கொண்டு ஏறுவதும் பின்னர் சரசரவென இறங்குவதுமா இருந்து வருகிறது. இதனால் நகை வாங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் நகைப்பிரியர்கள் இருந்து வருகின்றனர். அதாவது 2026ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது.

26
ஏற்றம் இறக்கத்தில் தங்கம்

இந்நிலையில் கடந்த 28ம் தேதி சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து சவரன் ரூ.134,400 உயர்ந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,800, மாலையில் ரூ.2,800 என குறைந்தது. இதன் மூலம் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1, 26,800க்கு விற்பனையானது. இதேபோல வெள்ளியும் காலையில் கிலோவுக்கு ரூ.10,000, மாலையில் கிலோவுக்கு ரூ.10,000 என ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து பார் வெள்ளி ரூ. 405,000 விற்பனையானது.

36
போட்டு போட்டு குறையும் தங்கம் வெள்ளி

நேற்று 2வது நாளாக தங்கம் விலை சரசரவென சரிந்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900க்கும், சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.119,200க்கும் விற்பனையானது. இதேபோல வெள்ளியும் நேற்று காலையில் கிடுகிடுவென சரிவை சந்தித்தது. அதாவது யாரும் எதிர்பார்க்காத வகையில் காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.350க்கும், கிலோவுக்கு ரூ.55,000 குறைந்து, பார் வெள்ளி ரூ. 320,000 லட்சத்துக்கும் விற்பனையானது. மேலும் மாலை நேரத்தில் வெள்ளி விலையில் எதிர்பாராத வகையில் மாற்றம் ஏற்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.320க்கும், கிலோவுக்கு ரூ.30,000 குறைந்து, பார் வெள்ளி ரூ.320,000 விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும் வெள்ளி ரூ.85,000 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அதே நேரத்தில் தங்கம் விலையில் மாலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்தது.

46
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்

இந்நிலையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா மற்றும் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.

56
இன்றைய தங்கம் நிலவரம்

இந்நிலையில் (பிப்ரவரி 01) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதாவது சவரன் ரூ. 119,200ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.14,900ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 16,255ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 130,040ஆக விற்பனையாகிறது.

66
வெள்ளி விலை

வெள்ளி விலை நேற்று இரண்டு முறை குறைந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. கிராம் ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.320,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories