ஒரே நிதியமைச்சர்.. இதற்கு முன் யாரும் செய்யாத சாதனை! இந்தியாவே வியந்து பார்க்குது!

Published : Feb 01, 2026, 08:22 AM IST

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் அரசின் வருவாய், செலவினங்களை விவரிப்பதுடன், நிதி மசோதா மற்றும் FRBM சட்டத்தின் கீழ் முக்கிய அறிக்கைகளையும் உள்ளடக்கியுள்ளது.

PREV
14
நிர்மலா சீதாராமன் படைக்கப் போகும் புதிய சாதனை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார். மக்களவை அலுவல் பட்டியலின்படி, காலை 11 மணிக்கு அவை கூடும் என்றும், அதன் பின்னர் பட்ஜெட் உரை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் மூலம், 2026-27 ஆண்டுக்கான இந்திய அரசின் மதிப்பீடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த முழுமையான அறிக்கையை நிதியமைச்சர் சமர்ப்பிப்பார்.

24
மத்திய பட்ஜெட் 2026

இதில் அரசு எவ்வளவு பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது, அந்தப் பணம் எந்த துறைகளில் செலவிடப்படும் என்பதற்கான தெளிவான கணக்குகள் இடம்பெறும். மேலும், 2003 ஆம் ஆண்டின் நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டத்தின் கீழ், இரண்டு முக்கிய அறிக்கைகளையும் சீதாராமன் அவையில் தாக்கல் செய்வார். அதில், இடைக்கால நிதிக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கை உத்தி அறிக்கை, மற்றும் பேரியல் பொருளாதார கட்டமைப்பு அறிக்கை ஆகியவை அடங்கும். இவை அரசின் முக்கிய நடுத்தர மற்றும் நீண்டகால நிதி திட்டங்களை விளக்கும் ஆவணங்களாகும்.

34
பட்ஜெட் 2026-27

அதே நேரத்தில், 2026 ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட அனுமதி கோருவார் என்றும் அலுவல் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் வரி மற்றும் செலவுத் திட்டங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கும் முக்கிய ஆவணமாகும். இதன் மூலம், நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது பெரிய சாதனை ஆகும். இதற்கு முன், 2025-26 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். பட்ஜெட்டுக்கு முன் பொருளாதார ஆய்வறிக்கை செய்வது, இந்திய நாடாளுமன்ற மரபில் நீண்ட காலமாக பின்பற்றப்படும் நடைமுறையாகும்.

44
நிர்மலா சீதாராமன் 9வது பட்ஜெட்

இந்த பொருளாதார ஆய்வறிக்கை, கடந்த ஓராண்டில் நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு செயல்பட்டது என்பதை தரவுகளுடன் மதிப்பாய்வு செய்யும் அதிகாரப்பூர்வ ஆண்டு அறிக்கையாகக் கருதப்படுகிறது. எதிர்கால கொள்கை முடிவுகள் ஏன் தேவை என்பதை விளக்கும் அடிப்படை ஆவணமாகவும் இது செயல்படுகிறது. 2025-26 பொருளாதார ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டிய பியூஷ் கோயல், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என முதல் முன்கூட்டிய மதிப்பீடுகள் கணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியா தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக திகழ்வதை உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories