மத்திய பட்ஜெட் அதுவுமா பொதுமக்கள் தலையில் இடியை இறக்கிய எண்ணெய் நிறுவனங்கள்! சிலிண்டர் விலை உயர்வு!

Published : Feb 01, 2026, 07:41 AM IST

LPG Cylinder Price:எண்ணெய் நிறுவனங்கள் பிப்ரவரி 1ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி ரூ.1,899.50 ஆக நிர்ணயித்துள்ளன. 

PREV
15
எண்ணெய் நிறுவனங்கள்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலைக்கு ஏற்றார் போல இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

25
விலை நிர்ணயம் செய்யும் எண்ணெய் நிறுவனங்கள்

அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

35
மத்திய பட்ஜெட்

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. 2026 புதிய ஆண்டில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை உயர்ந்தது. எனவே மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட மக்களுக்கு அதிர்ச்சி ஏமாற்றமே மிஞ்சியது.

45
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை

இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 உயர்ந்து ரூ.1,899.50ஆக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.160 உயர்ந்துள்ளது.

55
வீட்டு உபயோக சிலிண்டர் விலை

அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ஏறியதா? இறங்கியதா? என்பதை பார்ப்போம். வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.868.50க்கு விற்பனையாகிறது. பல மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories