சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூ.11770க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 240 ரூபாய் குறைந்து 94,160 ரூபாயாக உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவை சேர்ந்த சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் வெள்ளியின் விலை கிராம் 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட 4 ரூபாய் அதிகமாகும். ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மார்கழி மாதம் தேவை குறையும் என்பதால் அப்போது விலை குறையும் என்றும், அதுவரை காத்திருந்து தங்கத்தை வாங்கலாம் எனவும் முதலீட்டாளர்களுக்கு தங்க நகை வியாபாரிகள் சங்கம் அறிவுரை வழங்கியுள்ளது. வெள்ளியும் பாதுகாப்பான முதலீடு என்பதால் வெள்ளியையும் வாங்கி பயன் அடையளாம் என தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.