சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 93,760 ரூபாயை எட்டியுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாய் விலை அதிகரித்துள்ளதால் திருமணம் வைத்துள்ளவர்களும் அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களும் கவலை அடைந்துள்ளனர். நேற்று விலை குறைந்திருந்த நிலையில் தற்போது தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இனி எப்போது குறையும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
23
தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 720 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 1,600 ரூபாய் அதிகரித்து 93,760 ரூபாயாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவை சேர்ந்த சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்கம் மற்று்ம் வெள்ளி நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 1 கிராம் வெள்ளி 174 ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெள்ளி 1 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்துள்ளது.
33
உள்ளூர் சந்தையில் இதுதான் விலை
அதேபோல் மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 11 ஆயிரத்து 720 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை அதிகரித்தாலும் தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம்.