தங்கம் இப்போ வாங்கலனா எப்போதும் வாங்க முடியாது! ஒரே நாளில் சரிந்த விலை! கடைகளில் குவியும் கூட்டம்!

Published : Mar 14, 2026, 10:33 AM IST

அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான போர் காரணமாக உலக நாடுகள் பல்வேறு பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை எகிறும் என எதிர்பார்க்கப்பட்டது.

PREV
15

பங்குச்சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை போட்டா போட்டிக்கொண்டு ஜெட் வேகத்தில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

25

இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான போர் காரணமாக உலக நாடுகள் பல்வேறு பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை எகிறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக குறைந்து காணப்படுகிறது.

35

நேற்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

45

இந்நிலையில் இன்றைய (மார்ச் 14) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.14,760ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 16,102ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ. 128,816ஆக விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருவதால் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

55

அதேபோல் வெள்ளி விலை இன்று சரிந்துள்ளது. இன்று கிராம் ரூ.10 குறைந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.280,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories