ரயிலில் போர்டிங் ஸ்டேஷனை இப்படியும் மாற்றலாமா? சார்ட் போடுறதுக்கு முன்னாடி இதை செஞ்சிடுங்க!..

Published : Mar 13, 2026, 02:36 PM IST

ரயிலில் போர்டிங் பாய்ண்ட் எப்படி மாற்றுவது? என்பது குறித்தும் இதற்கு என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
13
ரயில் போர்டிங் பாய்ண்ட் மாற்றம்

இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு, திட்டமிட்டபடி குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்குச் செல்ல முடியாத சூழல் நமக்கு ஏற்படலாம். உதாரணமாக, சென்னையில் எழும்பூரில் ரயில் ஏற வேண்டிய நீங்கள், கடைசி நேரத்தில் தாம்பரத்திலோ அல்லது செங்கல்பட்டிலோ இருந்தால் பதற்றப்படத் தேவையில்லை. உங்கள் இப்போது போர்டிங் பாயிண்டை (Boarding Point) ஆன்லைனிலேயே சுலபமாக மாற்றிக்கொள்ளும் வசதியை IRCTC வழங்குகிறது.

23
ஆன்லைனில் போர்டிங் பாய்ண்ட் மாற்றுவது எப்படி?

* முதலில் irctc.co.in இணையதளம் அல்லது IRCTC செயலியில் உங்கள் கணக்கிற்குள் (Login) செல்லவும்.

*பின்பு 'My Account' பகுதிக்குச் சென்று, 'My Transactions' என்பதில் உள்ள 'Booked Ticket History' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

* இதன்பிறகு நீங்கள் மாற்ற விரும்பும் பயணச்சீட்டைத் (Ticket) தேர்ந்தெடுத்து அதன் விவரங்களைப் பார்க்கவும்.

* பின்னர் டிக்கெட் விவரங்களுக்குக் கீழே இருக்கும் 'Change Boarding Point' என்ற ஆப்ஷனைத் தட்டவும்.

* பிறகு உங்கள் பயணப் பாதையில் உள்ள ரயில் நிலையங்களின் பட்டியல் தோன்றும். அதில் நீங்கள் ஏறப்போகும் புதிய நிலையத்தைத் தேர்வு செய்து 'Confirm' கொடுக்கவும்.

* வெற்றிகரமாக மாற்றப்பட்டதும் உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி (SMS) வந்துவிடும்.

33
இந்த விதியில் கவனத்தில் கொள்ள வேண்டியவை

ரயில் கிளம்புவதற்கான சார்ட் (Chart) தயாரிக்கப்படும் முன்பே இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும். (முன்பு இருந்த 24 மணி நேரக் கட்டுப்பாடு இப்போது தளர்த்தப்பட்டுள்ளது).

போர்டிங் பாயிண்டை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற இயலாது.

நீங்கள் ஏறும் இடத்தை மாற்றிவிட்டால், பழைய ரயில் நிலையத்தில் இருந்துபயணம் செய்யும் உரிமையை நீங்கள் இழக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories