சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 7 நாட்களாக சரிந்து, சவரனுக்கு ₹71,320 ஆக விற்பனையாகிறது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர். தொடர்ந்து 7 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 560 ரூாய் வரை சரிவடைந்துள்ளது.
26
கடைக்கு போங்க! வாங்கி குவிங்க!
தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரகாலமாக வீழ்ச்சி அடைந்து வருவது நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், நகை வாங்குவோர் அதிக அளவில் நகைகளை வாங்க ஆரம்பித்து உள்ளனர். இதனால் ஞாயிற்று கிழமையான நேற்று நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
36
போருக்கு பின் மகிழ்ச்சி
இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சவரன் 74 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இஸ்ரேல் - ஈரான் மோதல் தணிந்துள்ள சூழலில் தங்கம் விலை சரிவடைந்து வந்தது. அதிலும் கடைசி சில நாட்களாக வேகமாக சரிந்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நேற்று விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. இன்று திங்கட் கிழமை வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,915 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான விலை வீழ்ச்சியின் தொடர்ச்சி ஆகும். அதேபோல் சவரனுக்கு (8 கிராம்) ரூ.120 குறைந்து ரூ.71,320 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
56
இதுதான் இன்றைய வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் காணப்படுகிறது. 1 கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும் 1 கிலோ வெள்ளி 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
66
நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு
தங்கம் வெள்ளி வாங்க திட்டமிட்டவர்கள், சந்தை நிலவரங்களை கவனித்த பின் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். விலை குறைவால் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் கருதப்படுகிறது. கடந்த வார தங்கம் விலை நிலவரம்.