Gold Rate Today (ஜனவரி 15) : தை பிறந்த நாள் தங்கத்துக்கு வழி பிறக்குமா? இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா?

Published : Jan 15, 2026, 10:26 AM IST

பொங்கல் தினமான இன்று (ஜனவரி 15) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.3000 அதிகரித்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14

தங்கம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ரொம்ப பிடித்தமான ஒன்று. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில் தை பிறந்தநாள் வழி பிறக்கும் என்பார்கள், ஆகையால் நகை விலை இனியாவது குறையுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் தினமான இன்று தங்கம் வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்ப்போம்.

24

நேற்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.

34

இந்நிலையில் இன்றைய (ஜனவரி 15) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,06,320ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.13,290ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.14,498ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 115,984ஆக விற்பனையாகிறது.

44

அதேபோல் வெள்ளி விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து புதிய வரலாறு படைத்துள்ளது. வெள்ளி விலை இன்று கிராம் ரூ.3 உயர்ந்து ரூ.310க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.310,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில், ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரே நாளில் இன்று 3000ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories