சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து, ரூ.80,040 ஆக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் ஆபணத்தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் அதிகரித்துள்ளது. 1 கிராம் தங்கம் 10 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் 80 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளதால் இல்லத்தரசிகள் மயக்கம் அடைந்துள்ளனர்.
24
எதிர்பாராத விலை ஏற்றம்.!
கடந்த வாரம் குறைந்திருந்த ஆபரணத்தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து 10 ஆயிரத்து 5 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 1,120 ரூபாய் அதிகரித்து 80,040 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 138 ரூபாய்க்கு விற்பனையானது.
34
எல்லா நகரங்களிலும் விலை உச்சம்.!
மதுரையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 10 ஆயிரத்து 5 ரூபாயாகவும், கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 10 ஆயிரத்து 5 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை ஏற்ற இறக்கத்திற்கு காத்திருக்காமல் கையில் பணம் இருந்தால் அதனை தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமாக உள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கு ஜிஎஸ்டி ஒரு முக்கிய காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் வரி விதிப்பு திட்டம், உலக நாடுகள் உடனான அமெரிக்காவின் நடப்புறவில் ஏற்படும் விரிசல் ஆகியவை சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதேபோல் அமெரிக்காவில் அதீத கடன் மற்றும் நிதி பற்றாக்குறை அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலாக மாறும் என முதலீட்டாளர்கள் நம்புவதாலும் தங்கம் மீதான முதலீட்டு அதிகரிக்க வழிவகுத்துள்ளது.