Gold Rate Today: தாறுமாறாக குறைந்த தங்கம் விலை! 5 நாட்களில் சவரனுக்கு ரூ.2,400 சரிவு! நகைக்கடைகளில் அலைமோதிய கூட்டம்!

Published : Jun 28, 2025, 10:25 AM IST

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை 5 நாட்களில் சவரனுக்கு ரூ.2,400 வரை சரிந்து, கிராம் ரூ.8,930 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை வீழ்ச்சி, டாலர் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

PREV
18
சரசரவென குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை தாறுமாறாக குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர். தொடர்ந்து 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூாய் வரை சரிவடைந்துள்ளது.

28
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 சரிவு

சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,930 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான விலை வீழ்ச்சியின் தொடர்ச்சி ஆகும். அதேபோல் சவரனுக்கு (8 கிராம்) ரூ.440 குறைந்து ரூ.71,440 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது ரூ.2,400 வரை சவரனுக்கு விலை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

38
விலை குறைய இதுதான் காரணம்!

சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சியால் இந்திய உள்நாட்டு சந்தையிலும் இதேபோல் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக அமெரிக்கா மத்திய வங்கியான Federal Reserve வட்டி விகிதங்களை அதிகரிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு, பங்கு சந்தைகளில் மீண்டும் நம்பிக்கை உருவாகியிருப்பது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து பணத்தை திரும்பப் பெற்றனர். தங்கம் எப்போதும் “சேஃப் ஹேவன்” எனப்படும் பாதுகாப்பான முதலீடு என்றாலும், பங்குசந்தை லாபத்துடன் இயங்கும்போது தங்கத்தின் தேவை குறைகிறது.

48
உதவி செய்யும் அமெரிக்க டாலர்

டாலர் மதிப்பு வலுப்பெறுவதும் தங்கத்தின் விலை குறைவுக்கு காரணமாக அமைந்தது. கடந்த சில நாட்களில் டாலர் இன்டெக்ஸ் (Dollar Index) 105 புள்ளிகளுக்கு மேல் சென்று, பிற நாணயங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலரின் வலுவை காட்டியுள்ளது. இதனால் தங்கம் வாங்கும் செலவு அதிகரித்து, உலகளாவிய நிலவரத்தில் தங்கத்தின் விலை சரிந்தது.

58
கிராமுக்கு ரூ.300 சரிவு

இந்த வாரம் மட்டும் சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.300 வரை வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த திங்கள் கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.9,230 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.8,930க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்க விலை மீண்டும் உயரும் என எதிர்பார்ப்பு இருந்தாலும், நிதிநிலை அறிக்கைகள் மற்றும் சர்வதேச சூழ்நிலைகள் தெளிவாகி வரும்வரை விலை அதிக ஏற்ற இறக்கம் காண்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

68
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை

23/06/2025 9230.00 0.00

24/06/2025 9155.00 0.00

25/06/2025 9070.00 0.00

26/06/2025 9070.00 0.00

27/06/2025 8985.00 0.00

28/06/2025 8930.00 0.00

78
வெள்ளி விலையிலும் சரிவு

வெள்ளி விலையிலும் சரிவு தொடர்கிறது. இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.119 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,000 குறைந்து ரூ.1,19,000 ஆகக் குறைந்துள்ளது. கடந்த வாரத்திலும் வெள்ளி விலை தொடர்ந்து ரூ.5 – ரூ.7 வரை கிராமுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

88
திட்டமிட்டு வாங்கினால் லாபம்

வெள்ளி விலை குறைவதற்கான முக்கிய காரணங்களில், தொழில்துறை தேவை குறைவதும், ஆபரண உற்பத்தியாளர்கள் புதுப்படுத்தும் வாங்கலை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும், உலக சந்தைகளில் பொருளாதார வளர்ச்சியில் சற்று சோர்வு காணப்படுவதால், வெள்ளி போன்ற உற்பத்தி உபயோகமான மெட்டல்களுக்கு (industrial metals) தேவையில் குறைவு ஏற்பட்டுள்ளது. தங்கம் வெள்ளி வாங்க திட்டமிட்டவர்கள், சந்தை நிலவரங்களை கவனித்த பின் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். விலை குறைவால் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories