சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.96,560 அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களில் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை எட்டக்கூடும் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
வாரத்தில் முதல் வர்த்தக தினமான திங்கள் கிழமை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் அதிகரித்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் விலை அதிகரித்துள்ளதால் திருமணம் வைத்துள்ளவர்களும் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களும், இல்லத்தரசிகளும் கவலை அடைந்துள்ளனர்.
24
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 70 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 720 ரூபாய் அதிகரித்து 96,560 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை மற்றும் வைரம், வெள்ளி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 1 கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெள்ளி 1 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்துள்ளது.
34
உள்ளூர் சந்தையில் இதுதான் விலை
அதேபோல் மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 12 ஆயிரத்து 70 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை அதிகரித்தாலும் தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம்.
கிருஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து கொண்டாட்டங்கள் வரவுள்ளதும், அமெரிக்காவில் அதீத கடன் மற்றும் நிதி பற்றாக்குறை அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலாக மாறும் என முதலீட்டாளர்கள் நம்புவதாலும் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் கொஞ்சம் காத்திருந்து தங்கத்தில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கம் விலை டிசம்பர் மாத்தில் ஒரு லட்சம் ரூபாயை தொடும் என சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.