அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ளது. இது இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை கடுமையாக பாதித்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வெளியாகியுள்ளன. உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி உயிரிழந்ததாக கூறப்படும் சூழ்நிலையில், அமெரிக்க ராணுவ தளங்கள் உட்பட பல முக்கிய மையங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மோதல் மத்திய கிழக்கை மட்டுமல்ல, உலகளாவிய பொருளாதாரத்தையும் பதற்றமடையச் செய்துள்ளது. இந்தியா போன்ற நாடுகள் சந்தை அதிர்வுகளை கவனமாக கண்காணித்து வருகின்றன.
25
எரிபொருள் நெருக்கடி அபாயம்
போர்நிலை உருவானவுடன் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி திரும்புவது வழக்கம். அதனால் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ.1.26 லட்சத்தை கடந்துள்ளது. உலக அரசியல் பதற்றம் நீடித்தால், தங்கம் மேலும் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாணய மதிப்பு சரியும் நேரங்களில், தங்கம் பாதுகாப்பு கவசமாக மாறுகிறது. எந்த நாட்டின் அரசும் உருவாக்காத இயற்கை வளமான தங்கம், உலகின் எங்கும் மதிப்பை இழக்காது என்பதே முதலீட்டாளர்களின் நம்பிக்கை.
35
மத்திய கிழக்கு மோதல்
இதற்கிடையில் எரிபொருள் சந்தையும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. மத்திய கிழக்கின் முக்கிய கடல்வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தி பாதிக்கப்பட்டால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்படும். இந்தியா தனது மாதாந்திர கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை இந்த வழியாகவே பெறுகிறது. இந்த போக்குவரத்து தடைபட்டால், பெட்ரோல், டீசல் விலை உயர்வது தவிர்க்க முடியாததாகும்.
ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் போன்ற நாடுகளிலிருந்து தினசரி லட்சக்கணக்கான பேரல்கள் ஹார்முஸ் வழியாக இந்தியாவை அடைகின்றன. மாற்று குழாய் வழிகள் இருந்தாலும், அவற்றைக் கொள்ளளவு குறைவாக இருப்பதால் முழுமையான தீர்வாக அமையாது. அதனால் சந்தையில் விலை ஏற்றம் ஏற்படும் அபாயம் அதிகம்.
55
இந்திய பொருளாதாரத்திற்கு புதிய சவால்
விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால், இந்தியா மீண்டும் ரஷ்யா அல்லது மேற்கு ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளிடம் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் தூரம் அதிகரிப்பதால் சரக்குக் கட்டணம் உயரும். இதன் விளைவாக விலைவாசி உயர்வு உலகளாவிய அளவில் தாக்கம் செலுத்தும். போரின் நேரடி தாக்கம் எல்லை கடந்தாலும், அதன் பொருளாதார அதிர்வு உலகம் முழுவதும் உணரப்படும் என்பது நிச்சயம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.