Gold rate
தங்கமும் முதலீடும்
பொன்னிலும் நிலத்திலும் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என கூறுவார்கள். ஆனால் நிலத்தில் முதலீடு செய்வதில் ஆபத்து இருப்பதால் நகையில் முதலீடு செய்யவே அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு எப்போதும் இழப்பு ஏற்படாது. அதற்கு ஏற்றார் போல தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஒரு சவரனுக்கு மட்டும் 40ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தை அதிகளவு வாங்கி வைத்தவர்களுக்கு ஜாக்பாட்டாகவே உள்ளது.
gold investment
ஏறி இறங்கிய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக ஏறி இறங்கி வருகிறது. அதன் படி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 60ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தை தொடும் நிலைக்கு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியோதா என பரிதவித்தனர். ஆனால் அடுத்த சில நாட்களில் வந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளால் தங்கத்தின் விலையானது குறைந்தது. ஒரு வாரத்திலையே ஒரு சவரனுக்கு 4ஆயிரம் ரூபாய் குறைந்தது.
gold rate in tamilnadu
தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
எனவே தங்கத்தின் விலை வரும் நாட்களில் உயரும் என்பதால் இது தான் நல்ல சான்ஸ் என தங்கத்தை மக்கள் வாங்கி குவிக்க தொடங்கினர். இருந்த போதும் அடுத்த ஓரிரு வாரங்களில் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கத்தின் விலையானது இந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 27% அதிகரித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை அதிகரிக்கும் போது கூட தங்கம் விலையும் உயர்ந்தது.
gold rate
தங்கம் விலை - அதிகரிக்கும் முதலீடு
2025ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் விலையும் தற்போது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. நகை ஆடம்பரப் பொருளாக இருந்தாலும் அதன் மதிப்பு ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருவதால் அதன் மீதான முதலீடும் அதிகரிக்கிறது. கடந்த சனிக்கிழமை ஒரு கிராமுக்கு 15 ரூபாயும், ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்தது. அதன் படி ஒரு கிராம் தங்கம் ரூ.7,135க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.
gold rate today
இன்றைய தங்கம் விலை என்ன.?
நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்க வர்த்தக சந்தை விடுமுறை காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றிமில்லை. இன்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 7150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 57ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.