How To Invest In SIP
மியூச்சுவல் ஃபண்டுகளில் தனிநபர்கள் பணம் போடுவது சமீப காலமாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தனிநபர்கள் தங்கள் பணத்தை SIP மூலம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் போடுகிறார்கள். பல ஃபண்டுகள் வலுவான வருமானத்தை வழங்குவதால், அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள்.
Equity Funds
நீங்களும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய சிறந்த ஃபண்டுகளைத் தேடுகிறீர்களா? கடந்த 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு வலுவான வருவாயை வழங்கிய மியூச்சுவல் ஃபண்டுகளை இத்தொகுப்பில் பார்க்கலாம். இவை ஆண்டுக்கு 33.22 சதவீதம் முதல் 48.22 சதவீதம் வரை வருமானம் ஈட்டியுள்ளன.
SIP Calculator
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் (Quant Small Cap Fund) கடந்த ஐந்தாண்டுகளில் சிறப்பான வருமானத்தை ஈட்டியுள்ளது. SIP மூலம் மாதந்தோறும் ரூ.10,000 பங்களித்த முதலீட்டாளர்கள், 48.22 சதவீதம் வருடாந்திர வருமானத்துடன் ரூ.19.01 லட்சம் நிதியைக் குவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து குவாண்ட் மிட் கேப் ஃபண்ட் (Quant Mid Cap Fund) மொத்தம் ரூ.14.81 லட்சத்தைக் குவித்துள்ளது, 5 ஆண்டுகளில் ரூ.10,000 SIP முதலீட்டுக்கு, 37.46 சதவீத வருடாந்திர வருவாய் கிடைத்துள்ளது.
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் (Quant Small Cap Fund) 10,000 ரூபாய் SIP திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதில் முதலீட்டாளர்கள் 5 ஆண்டுகளில் ரூ.19.01 லட்சம் ஈட்டியிருக்கிறார்கள். இதன் XIRR 48.52 சதவீதமாக உள்ளது.
குவாண்ட் மிட்கேப் ஃபண்ட் (Quant Mid Cap Fund) ரூ.10,000 எஸ்ஐபி (SIP) முதலீடு 5 ஆண்டுகளில் ரூ.14.81 லட்சத்தை ஈட்டியுள்ளது. இதன் XIRR 37.46 சதவீதமாக உள்ளது.
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டில் (Nippon India Small Cap Fund) மாதம் ரூ.10,000 முதல் SIP முதலீடு செய்திருந்தால், அது 5 ஆண்டுகளில் ரூ.14.79 லட்சமாக அதிகரித்திருக்கும். இதன் XIRR 37.4 சதவீதமாக உள்ளது.
நீங்கள் குவாண்ட் ஃபிளக்ஸி கேப் ஃபண்டில் (Quant Flexi Cap Fund) ரூ.10,000 SIP முதலீடு செய்திருந்தால், அது ரூ.14.49 லட்சமாக வளர்ந்திருக்கும். இதன் XIRR 36.51 சதவீதமாக உள்ளது.
आईसीआईसीआई (ICICI) प्रूडेंशियल चाइल्ड केयर फंड की लॉन्चिंग 31 अगस्त 2001 को हुईॉ। लॉन्चिंग के बाद से उसमें रिटर्न 15.48 फीसदी तक रहा है। इसमें 5000 रुपए मंथली एसआईपी (SIP) की 15 साल में वैल्यू 24 लाख रुपए हो जाती है। (फाइल फोटो)
நீங்கள் Quant ELSS Tax Saver Fund மூலம் ரூ. 10,000 SIP முதலீடு செய்திருந்தால், நீங்கள் 5 ஆண்டுகளில் ரூ.14.28 லட்சம் ஈட்டியிருப்பீர்கள். இதன் XIRR ரூ. 35.88 சதவீதம்.
அதிக வருமானத்தைக் கொடுத்த இந்த ஈக்விட்டி பண்டுகள், மியூச்சுவல் ஃபண்டின் சக்தியைக் காட்டுகின்றன. குறிப்பாக, எஸ்ஐபி முறையில் ரூ.500 முதல் முதலீட்டைத் தொடங்கலாம். அதற்குக் கிடைக்கும் வருமானம் பிக்சட் டெபாசிட் போன்ற வங்கித் திட்டங்களில் அளிக்கப்படும் வட்டியை விட மிக அதிகம்.
(பொறுப்புத்துறப்பு: மியூச்சுவல் ஃபண்டு சந்தை அபாயத்துகுக உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் ஆவணங்களை முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள். தேவைப்பட்டால், நிபுரணரின் ஆலோசனையையும் கேளுங்கள்.)