ஜனவரி 1 முதல் புதிய UPI விதிகள்! இரட்டிப்பாகும் பணப் பரிவர்த்தனை வரம்பு!

First Published | Dec 29, 2024, 5:35 PM IST

டிசம்பர் 31 முதல் UPI கட்டணம் தொடர்பான விதிகள் மாற உள்ளன. ஜனவரி 1, 2025 முதல், UPI 123Pay முறையைப் பயன்படுத்தி ரூ.10,000 வரை பணம் செலுத்தலாம். இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே இந்த சேவையின் மூலம் பணம் செலுத்தலாம்.

UPI 123PAY Rules

டிசம்பர் 31 முதல் UPI கட்டணம் தொடர்பான விதிகள் மாற உள்ளன. ஜனவரி 1, 2025 முதல், UPI 123Pay முறையைப் பயன்படுத்தி ரூ.10,000 வரை பணம் செலுத்தலாம். இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே இந்த சேவையின் மூலம் பணம் செலுத்தலாம்.

New UPI rules

ஜனவரி 1 முதல் UPI மூலம் பணம் செலுத்துவதற்கான விதிகளும் மாற உள்ளன. UPI 123Pay இன் பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முடிவு செய்துள்ளது. பயனர்கள் UPI 123Pay முறையில் ரூ.10,000 வரை பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும். முன்பு இந்த வரம்பு ரூ.5,000 வரை இருந்தது. UPI 123 Pay சேவையின் புதிய விதிகள் ஜனவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும்.

Tap to resize

123PAY UPI payments

சரி, UPI 123Pay என்பது என்ன? இந்த முறையில் பயனர்கள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் பணம் செலுத்து முடியும். ஆனால், இந்த முறையில் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தியுள்ளது.

UPI rules change

UPI 123Pay பரிவர்த்தனைகளை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இதனை நிர்வகிக்கிறது. இந்த முறையில், பயனர்களுக்கு அதிகபட்சமாக 4 பேமெண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. IVR அழைப்பு, கீபேட் போனில் உள்ள ஆப் வசதி, மிஸ்டு கால் வழிமுறை, மற்றும் ஒலி அடிப்படையிலான தொழில்நுட்பம் என நான்கு ஆப்ஷன்கள் கிடைக்கும்.

How to usue UPI 123PAY?

கீபேட் போன் வைத்திருப்பவர்கள் IVR மூலம் UPI பரிவர்த்தனைகளை செய்ய, 080-45163666, 08045163581, 6366200200 ஆகிய எண்களில் அழைத்து உங்கள் UPI ஐடியை சரிபார்க்க வேண்டும். அழைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, பரிவர்த்தனையை நிறைவு செய்யலாம்

UPI 123PAY

தற்போது இந்தியாவில் 4 கோடி கீபேட் போன் பயனர்கள் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், அவர்கள் UPI 123Pay முறையின் மூலம் அதிக வசதியைப் பெறப் போகிறார்கள்.

Latest Videos

click me!