இந்த சான்ஸ் மீண்டும் கிடைக்காது.! சவரனுக்கு 4160 ரூபாய் குறைந்த தங்கம் விலை.! 13 நாளில் கிடு கிடுவென சரிவு

First Published | Nov 14, 2024, 10:37 AM IST

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தீபாவளிக்குப் பின் 13 நாட்களில் சவரனுக்கு 4160 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் நகை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

gold

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் விலை கூடினாலும், குறைந்தாலும் மக்களின் கூட்டம் நகைக்கடைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சேமிப்பு தான். அந்த வகையில் தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது என கூறுவார்கள். அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போதோ யாரும் எதிர்பாராத விதமாக 60ஆயிரம் ரூபாயை கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தொட்டது. தீபாவளி பண்டிகை தினத்தில் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. மேலும் தங்களது குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாக தங்கத்தில் மக்கள் அதிக அளவில் முதலீடு செய்ய தொடங்கினர். 

gold

உயரும் தங்கம் விலை

இந்தநிலையில் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கமே 25ஆயிரம் ரூபாயை தொடும் என ஆய்வாளர்கள் கூறினார்கள் மேலும் ஒரு சவரன் தங்கம் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலையானது கடுமையாக குறைந்துள்ளது. இதற்கு அமெரிக்கா தேர்தலில் டிரம்ப் வெற்றி ஒரு காரணமாக கருதகப்படுகிறது. மேலும் பண்டிகை காலம் முடிந்த நிலையில் தங்கத்தில் மக்கள் அதிக அளவில் முதலீடு செய்யவில்லையெனவும் கூறப்படுகிறது. 

Latest Videos


gold ring

4000 ரூபாய் சரிந்த தங்கம் விலை

கடந்த ஆக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தில் ஒரு சவரன் தங்கம்  59,640 ரூபாய்  என்ற அதிகப்பட்ச உச்சத்தை பதிவு செய்தது. இதனையடுத்து தங்கத்தின் விலையானது அடுத்த 13 நாட்களில் கிடு கிடுவென குறைந்துள்ளது. நாள் தோறும் 300 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை தங்கம் விலை குறைந்தது. இந்தநிலையில் கடந்த 13 நாட்களில் ஒரு சவரனுக்கு 4160 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவே நல்ல சான்ஸ் என நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. 

gold ring

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலை ஆனது இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது அந்த வகையில் நேற்று ஒரு கிராம் தங்கநகையானது 7045 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 6935 ரூபாய் விற்பனையாகிறது. அந்த வகையில் ஒரு கிராமிற்கு 110 ரூபாய் குறைந்துள்ளது. 

இதே போல நேற்று ஒரு சவரன் தங்க நகை ஆனது 56 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று  ஒரு சவரனுக்கு 880 குறைந்து 55,480 ரூபாய்க்கு தங்கமானது இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது

click me!