எக்கச்செக்க லாபம் தரும் கோல்டு ETF! தங்கத்தில் முதலீடு செய்ய பெஸ்டு ரூட்!

First Published | Nov 14, 2024, 9:57 AM IST

கடந்த 3 ஆண்டுகளில், தங்க ETF (எக்ஸ்சேஞ்ச்-டிரேடட் ஃபண்டுகள்) முதலீடு ஆண்டுதோறும் 16.65% உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், கோல்டு ETF ஃபண்டுகள் 14 சதவீதத்துக்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளன.

Gold Exchange Trade Funds

தங்க ETF (எக்ஸ்சேஞ்ச்-டிரேடட் ஃபண்டுகள்) முதலீட்டாளர்களுக்கு தங்கத்தால் கிடைக்கும் வருமானத்துடன் கூடிய முதலீட்டு கருவியாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், தங்க ETF முதலீடு ஆண்டுதோறும் 16.65% உயர்ந்துள்ளது. அதே சமயம் நகை, நாணயம், போன்ற வடிவில் தங்கம் (24-காரட்) வாங்குவதும் 17.05% உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளின் வருமானத்தைப் பார்த்தால், கோல்டு ETF ஃபண்டுகள் 14 சதவீதத்துக்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளன.

What is Gold ETF?

தங்க ETF என்பது பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யும் நிதித் தயாரிப்புகள் மற்றும் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் தங்க ETF ஃபண்டுகளை வாங்கும்போது, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களின் பலனைப் பெறலாம்.

Latest Videos


LIC MF Gold ETF

இந்த ETF ஃபண்டில் ஒரு ஆண்டு வருமானம் 26.87%, 3 ஆண்டு வருமானம் 16.65%, 5 ஆண்டு வருமானம் 14.56%. இந்த ஃபண்ட் தொடங்கப்பட்டதில் இருந்து 6.9% வருமானத்தை அளித்துள்ளது. இது நவம்பர் 2011 இல் தொடங்கப்பட்டது. ரூ.151 கோடி சொத்துக்கள் (AUM) மற்றும் 0.41% செலவு விகித்தைப் கொண்டிருக்கிறது.

Invesco India Gold ETF FoF

இந்த ஃபண்டில்  1 ஆண்டு வருமானம் 27.02%, 3 ஆண்டு வருமானம் 16.51% மற்றும் 5 ஆண்டு வருமானம் 14.27%. இந்த ஃபண்ட் தொடங்கப்பட்டதில் இருந்து 6.91% வருமானத்தை அளித்துள்ளது. இது ரூ.98 கோடி AUM மற்றும் 0.10% செலவு விகிதத்தைக் கொண்டுள்ளது.

LIC MF Gold ETF FoF

இந்த ஃபண்டில் 1 ஆண்டு வருமானம் 26.72%, 3 ஆண்டு வருமானம் 16.51%, 5 ஆண்டு வருமானம் 14.23%. இந்த ஃபண்ட் தொடங்கப்பட்டதில் இருந்து 6.62% வருமானத்தை அளித்துள்ளது. ஜனவரி 1, 2013 அன்று தொடங்கப்பட்ட இந்த ETF ரூ. 64 கோடி AUM மற்றும் 0.26% செலவு விகிதம் கொண்டது.

Invesco India Gold ETF

இதில் ஓராண்டு வருமானம் 26.61%. 3 ஆண்டு வருமானம் 16.29%, 5 ஆண்டு வருமானம் 14.45% ஆக உள்ளது. இந்த ஃபண்ட் தொடங்கப்பட்டதில் இருந்து 10% வருமானத்தை அளித்துள்ளது. மார்ச் 2010 இல் தொடங்கப்பட்ட இந்த ஃபண்ட் ரூ. 141 கோடி AUM மற்றும் 0.55% செலவு விகிதத்தைக் கொண்டுள்ளது.

Axis Gold Fund

இந்த கோல்டு ETF முதலீட்டில் 1 ஆண்டு வருமானம் 26.54%, 3 ஆண்டு வருமானம் 16.29%, 5 ஆண்டு வருமானம் 14.42% ஆகும். இந்த ஃபண்ட் ஜனவரி 2013 இல் தொடங்கப்பட்டதில் இருந்து 6.8% வருமானத்தை அளித்துள்ளது. ரூ.699 கோடி AUM மற்றும் 0.17% செலவு விகிதத்தைக் கொண்டுள்ளது.

UTI Gold Exchange Traded Fund

இந்த ஃபண்டில் ஓர் ஆண்டு வருமானம் 26.87%, 3 ஆண்டு வருமானம் 16.25%, 5 ஆண்டு வருமானம் 14.15%. இந்த ஃபண்ட் மார்ச் 2017 இல் தொடங்கப்பட்டதில் இருந்து 11.61% வருமானத்தை அளித்துள்ளது.

மார்ச் 2017 இல் தொடங்கப்பட்டது. 0.49% செலவின விகிதம் மற்றும் ரூ.1,440 கோடி AUM  கொண்டிருக்கிறது.

SBI Gold Fund

இந்த ஃபண்டில் 1 ஆண்டு வருமானம் 26.45%, 3 ஆண்டு வருமானம் 16.24% மற்றும் 5 ஆண்டு வருமானம் 14.19% ஆகும். இந்த ஃபண்ட் 2013ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டதில் இருந்து 7% வருமானத்தை அளித்துள்ளது. இது 0.10% செலவின விகிதம் மற்றும் ரூ. 2,522 கோடி AUM கொண்டது.

click me!