போற போக்க பார்த்தா தங்கமே வாங்க முடியாது போல! ரூ.65,000ஐ நெருங்கும் விலையால் அலறும் நகைப்பிரியர்கள்!
தங்கம் என்ற வார்த்தை கேட்டாலே பொதுமக்கள் அலறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து அதிர்ச்சி தருகிறது. 2025ம் புதிய ஆண்டு எப்போது பிறந்ததோ இன்று முதலே தங்கம் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 61 ஆயிரத்தில் இருந்து வந்த தங்கம் மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது ரூ.65,000ஐ நெருங்கி வருகிறது.
25
gold rate
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை உயர்வால் திருமணத்திற்கு நகை வாங்க திட்டமிட்டவர்கள் கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தங்க நகைகளில் அதிகளவில் முதலீடு செய்தவர்கள் குஷியில் உள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
35
gold rate
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,200-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8,045-க்கு விற்பனையானது.
45
gold rate
இன்றைய (பிப்ரவரி 22) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,360-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,045-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 8,776-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.70,208-ஆக விற்பனையாகிறது.
55
Gold rate
வெள்ளி விலையில் ஒரு ரூபாய் குறைந்து கிராம் வெள்ளி ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.108,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.