மக்களே தங்கம் வாங்க இதுதான் சூப்பர் சான்ஸ்! சரசரவென விலை குறைந்து இன்ப அதிர்ச்சி!

Published : Apr 23, 2025, 10:24 AM ISTUpdated : Apr 23, 2025, 10:34 AM IST

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 குறைந்துள்ளது. சவரன் தங்கம் ரூ.72,120க்கும், கிராம் ரூ.9,015க்கும் விற்பனையாகிறது. 

PREV
16
மக்களே தங்கம் வாங்க இதுதான் சூப்பர் சான்ஸ்! சரசரவென விலை குறைந்து இன்ப அதிர்ச்சி!
Gold Rate

Gold and Silver Price today: கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இதற்க காரணம் உலக நாடுகளிடையே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சூழல் காரணம் மற்றும் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. 

26
Gold Rate Hike

புதிய உச்சத்தில் தங்கம் விலை

அதாவது ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 18-ம் தேதி ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.8,945, சவரன் ரூ.200 அதிகரித்து ரூ.71,560 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் 3 நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வந்தது. 

இதையும் படிங்க: ஏடிஎம் கட்டண உயர்வு: மே 1 முதல் அதிக செலவு
 

36
Yesterday Gold Rate

நேற்று சவரன் ரூ.2,200 உயர்ந்த தங்கம்

3 நாட்களுக்கு பின்னர் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.9,015, சவரன் ரூ.72,120 விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை எதிர்பாராத விதமாக ஒரே நாளில் ரூ.2,200 உயர்ந்தது. அதாவது சவரன் ரூ. 74, 320, கிராம் ரூ.275 உயர்ந்து ரூ.9,290 விற்பனையானது. இனிமேல் தங்கமே வாங்க முடியாது போல என்ற முடிவுக்கு நடுத்தர மக்கள் வந்துவிட்டனர். 

46
Today Gold Rate

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் திடீரென பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது இன்று சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.9,015-க்கு விற்பனையாகிறது. 

56
24 carat Gold Rate

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 9,834-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.78,672ஆக விற்பனையாகிறது. 
 

66
Silver Rate

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதாவது கிராம் வெள்ளி ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.111,00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories