Published : Apr 23, 2025, 08:03 AM ISTUpdated : Apr 23, 2025, 08:08 AM IST
நுட்பமாகத் தயாரிக்கப்பட்ட போலி நோட்டுகள் சந்தையில் புழக்கத்தில் உள்ளன. அவை அசல் நோட்டுகளைப் போலவே தோற்றமளிக்கின்றன. தினமும் மக்கள் அறியாமலேயே போலி நோட்டுகளைக் கையாள்கின்றனர்.
மீண்டும் சந்தையில் போலி நோட்டுகள் புழக்கம் அடைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக நுட்பமாகத் தயாரிக்கப்பட்ட இந்த நோட்டுகள், அச்சு மற்றும் தரத்தின் அடிப்படையில் அசல் நோட்டுகளைப் போலவே காட்சியளிக்கின்றன.
25
500 Rupee Notes
போலி ரூ.500 நோட்டு
இந்த போலி நோட்டுகள் எளிதில் கண்டுபிடிக்க முடியாததால், அசல் மற்றும் போலி நோட்டுகளுக்கு இடையிலான வித்தியாசத்தைக் கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது. இந்த போலி நோட்டுகளில் 'Reserve Bank Of India' என்ற எழுத்தில் 'Reserve Bank' என்பது 'Resarve Bank' என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது.
35
Rs 500 Note
போலி நோட்டுகள் புழக்கம்
கவனமாகப் பார்த்தால்தான் இந்தத் தவறு தெரியவரும். இந்த போலி நோட்டுகள் பெருமளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. பொதுமக்களும் வங்கிகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
45
Rs 500 Currency Note
போலி நோட்டுகளின் எண்ணிக்கை
எவ்வளவு போலி நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என்பதைக் கணக்கிடுவது கடினம். போலி நோட்டுகளைக் கட்டுப்படுத்த சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
55
Indian Currency
வங்கிகளின் சிறப்பு ஏற்பாடுகள்
போலி நோட்டுகளைக் கண்டறிவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வங்கிகள் செய்துள்ளன. எனவே மக்கள் தாங்கள் பயன்படுத்தும் நோட்டு உண்மையா? அல்லது போலியா? என்று கண்டறிய வேண்டும்.