தங்கம் என்றாலே ஆண், பெண்கள் என பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த வகையில் மற்ற நாட்டு மக்களைவிட இந்திய மக்களிடம் தான் டன் கணக்கில் தங்க நகைகளை வாங்கி குவித்துள்ளனர். அதுவும் குறிப்பாக தமிழகத்தில் அதிகம். தங்க நகைகளை ஆடம்பர பொருளாக இருந்தாலும் திருமணங்கள், விஷேச நாட்களின் தங்க நகைகளின் பயன்பாடு அதிகமாக இந்தியாவில் உள்ளது. எனவே தங்கள் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாகவும் தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள்.
25
gold rate today in Chennai
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போது பதவியேற்றாரோ அன்று முதல் தங்கம் ஜெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஒரு சவரன் ரூ.55,000 விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு சவரனுக்கு ரூ. 66,000 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எனவே தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் நடுத்தர மக்கள் தங்க நகைகளை வாங்க முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.66,480-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,310-க்கு விற்பனையானது.
45
Gold Rate Down
இன்றைய (அக்டோபர் 21) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அடைய செய்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.66,160-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,270-க்கு விற்பனையாகிறது.