தாந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு, போன்பே ஆப்பில் ரூ.2,000 அல்லது அதற்கு மேல் 24K டிஜிட்டல் தங்கம் வாங்கும் பயனர்களுக்கு 2% வரை கேஷ்பேக் வழங்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தாந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு டிஜிட்டல் பேமெண்ட் தளமான போன்பே ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 18 (சனிக்கிழமை) அன்று, போன்பே ஆப்பில் ரூ.2,000 அல்லது அதற்கு மேல் மதிப்பிலான 24K டிஜிட்டல் தங்கம் வாங்கும் பயனர்களுக்கு அதிகபட்சம் 2% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஒரே ஒரு டிரான்ஸாக்ஷனுக்கு மட்டும் செல்லுபடியாகும் மற்றும் அது அந்த நாளில் மட்டுமே (12:00 AM முதல் 11:59 PM வரை) கிடைக்கும் என்று போன்பே தெரிவித்துள்ளது.
24
டிஜிட்டல் கோல்ட்
போன்பே ஆப்பில் தங்கம் வாங்குவது மிகவும் எளிது. ஹோம் பேஜில் உள்ள ‘டிஜிட்டல் கோல்ட்’ ஐகானை கிளிக் செய்து ‘டிஜிட்டல் தங்கத்தை வாங்குங்கள்’ என்பதை தேர்வு செய்யவும். அடுத்து ‘Buy in Rs’ என்பதைத் தேர்வு செய்து குறைந்தது ரூ.2,000 மதிப்புள்ள தங்கம் சேர்க்கவும். விவரங்களை சரிபார்த்து ‘Proceed & Pay’ கிளிக் செய்தவுடன், உங்கள் டிரான்ஸாக்ஷன் முடிந்துவிடும். இந்த சலுகை MMTC-PAMP, SafeGold, Caratlane போன்ற பிரபல நிறுவனங்களின் 99.99% சுத்தமான தங்கத்திற்காக மட்டுமே பொருந்தும்.
34
போன்பேவில் தங்கம் வாங்கலாம்
போன்பே வழியாக பயனர்கள் ஒரு முறை தங்கம் வாங்குவதற்கு அல்லாமல், தினசரி அல்லது மாதாந்திர SIP (முறையான முதலீட்டுத் திட்டம்) மூலமாக சிறிது சிறிதாக முதலீடு செய்து தங்கக் கொள்முதல் தொகையை அதிகரிக்க முடியும். தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் விற்று பணமாக மாற்றும் வசதியும் உள்ளது. வாங்கிய தொகை உங்கள் வங்கிக் கணக்கில் பிடித்தம் செய்யப்படும். விற்றால் அதே கணக்கில் பணம் திரும்ப சேரும்.
போன்பே-யில் டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கு EMI ஆப்ஷன் இல்லை. ஆனால், நீங்கள் ரூ.1,99,999 வரை தங்கம் வாங்க முடியும். தங்க விலை உயர்ந்தாலும், டிஜிட்டல் தங்கம் என்பது பாதுகாப்பானது, சிக்கலற்றது, நீண்டகால முதலீட்டிற்கு உகந்தது. இது ஆன்லைனில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும்; அதற்கேற்ற தங்கம் உங்களுக்காக நிறுவனத்தின் பாதுகாப்பு வால்ட்டில் வைக்கப்படும்.