சர்வதேச சந்தையில் தங்கம் தேவை குறைந்தது, மற்றும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியது உள்ளிட்ட காரணங்களே தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய காரணமாக நிதி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். போர் போன்ற பதற்றங்கள் ஏற்கனவே தங்க விலையை உயர்த்தியிருந்தன. இப்போது அந்தப் பதற்றம் சற்று குறைந்து, உலக அளவில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கத்தின் "பாதுகாப்பு" தேவை குறைந்து விலை சரிந்தது.
கச்சா எண்ணெய் விலை குறைதல் மற்றும் ரூபாய் மதிப்பு ஸ்திரத்தன்மை தங்க இறக்குமதி செலவைக் குறைக்க உதவியது. மேலும், வங்கி வட்டி விகிதங்கள் உயர்ந்தால், மக்கள் தங்கத்தை விட்டு ஃபிக்ஸ் டெபாசிட் போன்ற பாதுகாப்பான ஆப்ஷன்களுக்கு மாற்றியது போன்றவையும் விலை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.