சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ₹2,400 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச காரணங்கள், பண்டிகை கால தேவை அதிகரிப்பு போன்றவற்றால் விலை உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தினமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் தங்கம் விலை குறையும் என்ற நம்பிக்கை நடுத்தர மக்களிடம இருந்து முழுமையாக அகன்றுள்ளது. வெள்ளி விலையும் சமீப காலமாக தங்கத்திற்கு கம்பெனி கொடுத்து உச்சம் பெற்றுள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் வரலாறு காரணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பண்டிகை காலம் காரணமாக இந்தியாவில் தங்கம் தேவை அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச காரணங்களும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
23
விலையை கேட்டாலே மயக்கம் வரும்
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து 12 ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்து 97,600 ரூபாயாக உள்ளது. இருந்த போதிலும் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 203 ரூபாயாக உள்ளது. 1 கிலோ பார் வெள்ளி விலை 2 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாக உள்ளது. மத்திய வங்கிகள் முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியது, சாதகமற்ற பொருளாதார சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியது உள்ளிட்ட காரணங்களே தங்கம் விலை அதிகரிக்க காரணமாக பொருளாதார ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
33
எப்போ தங்கத்தில் முதலீடு செய்யலாம்?!
இந்தியாவில் முகூர்த்த நாட்கள் தொடங்கியுள்ளதால் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், விலை குறையும் நாட்களில் நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தில் முதலீடு செய்யலாம் எனவும் தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜுலானி தெரிவித்துள்ளார். அதேபோல் வெள்ளியின் தேவையும் அதிகரித்து வருவதால் அதன் விலையும் அதிகரிக்கும் என்றும் தங்க நகை வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது.