கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு வரப்போகுது.! கவலை வேண்டாம்.! இந்த 5 மாற்றுவழி இருக்கு.!

Published : Mar 10, 2026, 02:55 PM IST

Gas Cylinder Price Shortage in India : சமையல் எரிவாயு விலை மற்றும் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு பெரும் கவலையை அளித்துள்ளன. இந்த காலத்தில் எரிவாயு சிலிண்டருக்கு மாற்றாக பயன்படுத்த பல சிறந்த வழிகள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
17
Alternative for Gas Cylinders

உலக அளவில் போர் பதற்றங்கள் நீடித்து வரும் நிலையில் சர்வதேச சந்தையில் எரிபொருளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் சிக்கித் தவித்து வருகின்றன. இன்று அதிகாலை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பல மாநிலங்களில் தங்களின் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மேலும் பல மாநிலங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் சில இடங்களில் சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

27
சிலிண்டர் தட்டுப்பாடு

சிலிண்டர் தட்டுப்பாடு செய்தியால் பலரும் சிலிண்டரை புக்கிங் செய்து வருகின்றனர். இதனால் எண்ணெய் நிறுவனங்கள் முன்பதிவு கால அவகாசத்தை 25 நாட்களாக உயர்த்தி உள்ளன. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அதற்கு மாற்றாக பல சிறந்த வழிகள் உள்ளன. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க உதவும் 5 சிறந்த மாற்றுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

37
இன்டக்ஷன் அடுப்புகள் (Induction Stoves)

சிலிண்டருக்கு மிகச்சிறந்த மற்றும் முதன்மையான மாற்று இன்டக்ஷன் அடுப்புகள் தான். இது மின்சாரத்தின் மூலம் இயங்கினாலும் மிகக் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்துகிறது. கேஸ் அடுப்பைக் காட்டிலும் இது 50% வேகமானது. இதில் உள்ள டைமர் வசதி உணவை கருக விடாமல் பாதுகாக்கும். சிலிண்டர் தீர்ந்து போகும் அவசர காலங்களில் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். மேலும் இது பாதுகாப்பான மற்றும் நவீனமான விருப்பமாகும். பல பெரிய நிறுவனங்கள் இந்த வகை அடுப்புகளை மிகக் குறைந்த விலையில் வழங்கி வருகின்றன.

47
மின்சார பிரஷர் குக்கர்கள் (Electric Pressure Cooker)

மின்சார பிரஷர் குக்கர்கள் சமீப காலமாக இந்திய சமையலறைகளில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. சாதம் முதல் பிரியாணி வரை அனைத்தையும் இதில் ஒரே நேரத்தில் சமைக்கலாம். இது ஆல் இன் ஒன் கருவியாகும். எரிவாயுவை மிச்சப்படுத்துவதுடன் சமையல் நேரத்தையும் பாதியாக குறைக்கிறது. தானியங்கி வசதி இருப்பதால் அடுப்பின் அருகில் நின்று கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. பல அடுக்குகள் கொண்ட பிரஷர் குக்கர்கள் சாதம் வேக வைப்பது, காய்கறிகள் வேக வைப்பது, இறைச்சிகளை வேக வைப்பது என்ற பல பணிகளை ஒரே நேரத்தில் செய்கின்றன.

57
சோலார் அடுப்புகள் (Solar Stoves)

இயற்கை தந்த வரமான சூரிய ஒளியை பயன்படுத்தி சமைப்பது, செலவே இல்லாத ஒரு முறையாகும். இதற்கு மின்சாரமோ, கேஸோ தேவையில்லை. ஒரு முறை முதலீடு செய்தால் பல ஆண்டுகள் வரை இலவசமாக சமைக்கலாம். இந்த வகை அடுப்புகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. குறிப்பாக வெயில் அதிகம் உள்ள நம் ஊர்களுக்கு சூரிய சோலார் அடுப்புகள் மிகவும் பொருத்தமானது.

67
பயோ கேஸ் (Bio Gas)

வீட்டுத் தோட்டம் அல்லது கால்நடைகள் வைத்திருப்பவர்களுக்கு பயோ கேஸ் மிகவும் சிறந்த தீர்வாகும். சமையலறை கழிவுகள் மற்றும் சாணத்தை பயன்படுத்தி இதைப் பெறலாம். கழிவுகளை மேலாண்மை செய்வதுடன் இலவசமாக எரிவாயையும் வழங்குகிறது. இந்த பயோ கேஸ் முறையில் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. நீண்ட கால அடிப்படையில் இது மிகப்பெரிய பண சேமிப்பையும் வழங்குகிறது.

77
ஏர் ஃப்ரையர் மற்றும் மைக்ரோவேவ் அவன் (Air Fryer)

எண்ணெய் இல்லாமல் பொறிக்கவும், உணவை சூடு படுத்தவும், கேக் போன்றவற்றை செய்யவும் ஏர் ஃப்ரையர் மற்றும் மைக்ரோவேவ் அவன் ஆகியவை பயன்படுகின்றன. கேஸ் அடுப்பில் அதிக நேரம் எடுக்கும் வேலைகளை இவை சில நிமிடங்களில் முடித்துவிடும். கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் இதையும் வைத்துக்கொண்டு சமைப்பது எரிவாயுவை மிச்சப்படுத்தும். எரிவாயு பயன்பாட்டை கணிசமாக குறைக்க உதவும். ஆரோக்கியமான சமையலுக்கு இது ஏற்றது.

எப்போதும் ஒரே ஒரு எரிபொருளை மட்டும் நம்பி இருக்காமல் மேலே சொன்னவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பாக இண்டக்ஷன் அடுப்பை மாற்று ஏற்பாடாக வைத்திருப்பது புத்திசாலித்தனமான முடிவாகும். இது உங்கள் பட்ஜெட்டை குறைப்பதுடன், இக்கட்டான நேரங்களில் பதற்றமில்லாமல் சமைக்க உதவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories