2026 ஜனவரி 1 முதல், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வங்கி விதிகளை அமல்படுத்தி உள்ளது. இதன்படி வங்கிகளில் உள்ள குறிப்பிட்ட 3 வகை கணக்குகள் மூடப்படும். இதனை அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
புதிய ஆண்டான 2026 ஜனவரி 1 முதல், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சில முக்கிய மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த சில வங்கிக் கணக்குகள் மூடப்பட வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான கணக்குதாரர்களை இது பாதிக்கக்கூடும் என்பதால், அனைவரும் இந்த விதிகளை புரிந்து கொண்டு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
25
வங்கிக் கணக்கு விதிகள்
இந்த முடிவின் முக்கிய நோக்கம், வங்கிகளை மேலும் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையானதாகவும் சேவை மாற்றுவது. நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத கணக்குகள், மோசடி, ஹேக்கிங், பண மோசடி போன்ற அபாயங்களுக்கு எளிதில் இலக்காகின்றன. இதனை தடுக்கும் வகையில், RBI இந்த புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. டிஜிட்டல் வங்கி அமைப்பை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களின் பண பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
35
டார்மன்ட் கணக்கு
முதலாவது வகை டார்மன்ட் (Dormant) கணக்குகள். இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக எந்த பணப் பரிவர்த்தனையும் நடக்காத கணக்குகள் டார்மண்ட் கணக்குகளாக கருதப்படுகின்றன. இவ்வகை கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்படாமல், ஹேக்கர்களுக்கு எளிதாக இலக்காக மாறுகின்றன. அதனால், அத்தகைய கணக்குகள் பயன்பாட்டில் இல்லாவிட்டால் மூடப்படலாம்.
இரண்டாவது, இன் ஆக்டிவ் (செயலற்ற) கணக்குகள். பொதுவாக 12 மாதங்கள் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை இல்லாத கணக்குகள் இந்த வகையில் அடங்கும். இவற்றையும் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகம். புதிய விதிகளின்படி, கணக்குதாரர் சிறிய பரிவர்த்தனை ஒன்றைச் செய்தால்கூட, அந்தக் கணக்கை மீண்டும் செயலில் வைக்க முடியும்.
55
ஜீரோ பேலன்ஸ் கணக்கு
மூன்றாவது, ஜீரோ பேலன்ஸ் கணக்குகள். நீண்ட காலமாக பணமில்லாமல் இருக்கும் கணக்குகள் மூடப்படலாம். இதன் மூலம் தவறான பயன்பாடுகளை குறைப்பதுடன், KYC விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை வங்கிகள் உறுதி செய்ய உதவும். எனவே, உங்கள் கணக்கு செயலில் உள்ளதா என்பதை சரிபார்த்து, தேவையான நடவடிக்கைகளை உடனே எடுப்பது பாதுகாப்பானது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.