இனி டோல் பிளாசாவுக்கு நேரில் செல்லாமல், உங்கள் மொபைல் போன் மூலமாகவே டிஜிட்டல் லோக்கல் பாஸ் பெறலாம். இந்த புதிய வசதியை NHAI அறிமுகப்படுத்தியுள்ளது.
டோல் பிளாசாவிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் வாகன உரிமையாளர்கள், இந்த டிஜிட்டல் லோக்கல் பாஸ் பெற தகுதியானவர்கள்.
ராஜ்மார்க் யாத்ரா மொபைல் ஆப்பில் உள்ள 'லோக்கல் பாஸ்' என்ற புதிய வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்.
இந்த லோக்கல் பாஸ் கிடைத்தால், சம்பந்தப்பட்ட டோல் பிளாசா வழியாக ஒரு மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
முன்பெல்லாம் இந்த பாஸ் வாங்க, டோல் பிளாசாவுக்கு நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இனி எல்லா நடைமுறைகளும் ஆன்லைனில்தான்.
இந்த புதிய அமைப்பு டிஜிலாக்கர் மற்றும் வாஹன் தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன விவரங்கள் மற்றும் ஃபாஸ்டேக் தகவல்கள் தானாகவே சரிபார்க்கப்படும்.
விண்ணப்பதாரரின் வசிப்பிடம், டோல் பிளாசாவிலிருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ளதா என்பது GIS தொழில்நுட்பம் மூலம் சரிபார்க்கப்படும்.
டெல்லியில் உள்ள அர்பன் எக்ஸ்டென்ஷன் ரோடு-2-ல் உள்ள முண்ட்கா-பக்கர்வாலா டோல் பிளாசாவில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற டோல் பிளாசாக்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
ஃபாஸ்டேக், KYC, ரீஃபண்ட், லோக்கல் பாஸ், வருடாந்திர பாஸ் தொடர்பான சேவைகளுக்கும், புகார்களை அளிக்கவும் 'மார்க் மித்ரா' அமைப்பு உதவும்.
டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம், டோல் நடைமுறைகளை விரைவுபடுத்தி, தேசிய நெடுஞ்சாலைப் பயணத்தை இன்னும் எளிதாக்குவதே NHAI-யின் நோக்கம்.