ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் நிறுவனர் திருபாய் அம்பானி. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் முன்னணி நிறுவனமாக மாறியுள்ளது. தொலைநோக்குப் பார்வை கொண்ட மறைந்த தொழிலதிபரான திருபாய் அம்பானி, வணிகத்தில் முன் அனுபவம் இல்லாத போதிலும் 1958 இல் ரிலையன்ஸ் நிறுவனத்தை நிறுவினார்.
திருபாய் அம்பானி பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஏமனில் உள்ள எரிவாயு நிலையத்தில் முதன் முதலில் பணி புரிந்தார். அவர் அங்கு பணிபுரியும் போது அவரது முதல் சம்பளம் வெறும் ரூ. 300 தான்.
கோத்ரெஜ் நிறுவனர், அர்தேஷிர் கோத்ரேஜின் முதல் வேலை
வழக்கறிஞராக இருந்து தொழிலதிபராக மாறிய அர்தேஷிர் புர்ஜோர்ஜி சொராப்ஜி கோத்ரெஜ் தான், 1897 ஆம் ஆண்டு கோத்ரேஜ் குழுமம் என்று அழைக்கப்படும் இந்திய நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனம் கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் ஒரு பகுதியாக மாறியது. கோத்ரேஜ் பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை ஒரு சிறிய கொட்டகையின் கீழ் தொடங்கினார், ஆனால் விரைவில் அந்நிறுவனம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அர்தேஷிர் கோத்ரேஜின் பர்ஸ்ட் ஜாப் மருந்து கடையில் உதவியாளராக இருந்ததுதான். அப்போதுதான் அவருக்கு அறுவை சிகிச்சை கருவிகளில் ஆர்வம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை கருவிகளின் உற்பத்தியில் ஒரு நிறுவனனத்தை நிறுவ அவர் முயன்றார், ஆனால் அது நிறைவேறவில்லை. ஆனால் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கோத்ரேஜ் பிரதர்ஸ் நிறுவனத்தை நிறுவினார்.