மிடில் கிளாஸ் மக்களுக்கு அதிக லாபம் தரும் சிறுசேமிப்புத் திட்டங்கள்!

Published : Nov 27, 2024, 09:13 AM ISTUpdated : Nov 27, 2024, 09:31 AM IST

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) ஆகியவை நடுத்தர வர்க்கத்தினரிடையே மிகவும் பிரபலமாக உள்ள திட்டங்கள் உள்ளன. இவற்றின் மூலம் அதிக லாபம் ஈட்டுவது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

PREV
15
மிடில் கிளாஸ் மக்களுக்கு அதிக லாபம் தரும் சிறுசேமிப்புத் திட்டங்கள்!
Schemes for Middle Class

முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும் பல சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இவற்றில், நடுத்தர வர்க்கத்தினரிடையே மிகவும் பிரபலமான இரண்டு திட்டங்கள் உள்ளன. பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) ஆகியவை மிடில் கிளாஸ் மக்களுக்கு அதிக லாபத்தை வழங்கி வருகின்றன.

25
Public Provident Fund

வேலையில் இருப்பவர்கள் மத்தியில் பிரபலமான இந்தத் திட்டத்தில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம். PPF ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வரிச் சலுகைகளையும் பெறலாம். இந்த திட்டத்தில் ரூ.500 முதல் முதலீட்டைத் தொடங்கலாம். PPF எனப்படும் பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தில் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் டெபாசிட் அனுமதிக்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தத் தொகைக்கு வரிச் சலுகைகளைப் பெறலாம். நீங்கள் 15 ஆண்டுகளுக்கு PPF திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகும் மேலும் 5 வருடங்களுக்கு நீட்டலாம்.

35
Sukanya Samriddhi Yojana

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்பது உங்கள் பெண் குழந்தையின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்ட அரசுத் திட்டமாகும். SSY திட்டத்தின் கீழ், ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். சுகன்யா சம்ரித்தி கணக்கில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு இப்போது 8.2% வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது.

45
Best Savings Scheme

SSY திட்டத்தில் தொடங்கிய கணக்கு 21 ஆண்டுகள் முதிர்வுக்காலம் கொண்டது. ஆனால் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் போதும். 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரும் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கைத் தொடங்கலாம். ஒரு பெண்ணுக்கு ஒரு கணக்கு மட்டுமே திறக்க முடியும். அதே நேரத்தில், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு கணக்குகளைத் திறக்கலாம்.

55
Small savings schemes

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) போன்ற சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. இப்போது, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்கு சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் டிசம்பர் கடைசி வாரத்தில் நிதியமைச்சகம் சார்பில் அறிவிக்கப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories