Published : Nov 27, 2024, 08:12 AM ISTUpdated : Nov 27, 2024, 08:29 AM IST
ATM Withdrawal: இப்போது வங்கிகளின் ஏடிஎம்களிலும் சிறிய நோட்டுகள் வழங்கப்படும். ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியதை அடுத்து, வங்கிகள் ஏடிஎம் இயந்திரங்களில் 500 ரூபாய் நோட்டுகளுடன் 200, 100 ரூபாய் நோட்டுகளை ஏற்றத் தொடங்கியுள்ளன.
இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி தரும் விஷயம். இப்போது ஏடிஎம்களில் சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும் கிடைக்கும். இது தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, வங்கிகள் ஏடிஎம் இயந்திரங்களில் 500 ரூபாய் நோட்டுகள் தவிர, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளையும் வழங்கத் தொடங்கியுள்ளன.
25
ATM Rules
நீண்ட நாட்களாக, வங்கிகளின் ஏ.டி.எம்.,களில், 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் குறைவான செலவுகளுக்கு சிறிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைக் கருத்தில் கொண்டு வங்கிகள் ஏடிஎம் இயந்திரங்களில் 500 ரூபாய் நோட்டுகளுடன் 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை ஏற்றத் தொடங்கியுள்ளன.
35
Small notes in ATM
எஸ்பிஐ (SBI) உள்ளிட்ட அனைத்து முக்கிய வங்கிகளின் ஏடிஎம்களிலும் மக்கள் பணம் எடுக்கும்போது, பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளே கிடைக்கும். இப்போது 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளும் கிடைக்கும். சிறிய நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதைக் கருத்தில் கொண்டு, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.
45
RBI Rules on ATM Withdrawal
ஏடிஎம்களில் 200, 100 ரூபாய் நோட்டுகளை வழங்குவதன் மூலம் குறைந்த செலவுகளுக்கு ஏற்ப பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி கிடைக்கிறது. இதன் மூலம் சிறிய ரூபாய் நோட்டுகளுக்கான தட்டுப்பாடு ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
55
ATM Cash
பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்களில் 500 ரூபாய் நோட்டுகளுடன் 200, 100 ரூபாய் நோட்டுகளை ஏற்றும் முறை கட்டாயமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு சிரமங்களுக்கு தீர்வு கிடைக்கும்.