உங்க 500 ரூபாய் நோட்டு ஒரிஜினலா? கள்ள நோட்டா? இப்படி செக் பண்ணிப் பாருங்க!

First Published | Nov 26, 2024, 3:55 PM IST

கள்ள நோட்டுகளுக்கு யார் வேண்டுமானாலும் பலியாகலாம். அசல் 500 ரூபாய் நோடு எப்படி இருக்கும் என ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது. அதன் தனித்துவமான அம்சங்களைக் கொண்டு, உண்மையான நோட்டு எது கள்ள நோட்டு எது என சுலபமாக அடையாளம் காணலாம்.

500 rupee note

உங்களுடைய 500 ரூபாய் நோட்டு ஒரிஜினல் தானா? நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலி ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்கும் செய்திகள் வருகின்றன. 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதன் மூலம், 500 ரூபாய் நோட்டுதான் புழக்கத்தில் உள்ள அதிக மதிப்புடைய கரன்சியாக இருக்கிறது.

Fake ₹500 notes detection

இந்நிலையில், 500 ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட போலி ரூபாய் நோட்டுகள் பற்றி நிதி அமைச்சகம் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. நிதியமைச்சக அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் போலி 500 ரூபாய் நோட்டுகள் 317% அதிகரித்துள்ளது.

Latest Videos


₹500 note authenticity check

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 2018-19 நிதியாண்டில் போலி 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 21,865 மில்லியனாக இருந்தது. இது 2022-23 நிதியாண்டில் 91,110 மில்லியனாக அதிகரித்துள்ளது. இருப்பினும், 2023-24 நிதியாண்டில், இது 15% குறைந்து, 85,711 மில்லியனாக உள்ளது.

How to identify fake currency?

2021-22 நிதியாண்டில் போலியான 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் பெருகியுள்ளன. 2020-21 நிதியாண்டில் போலி 500 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை 39,453 மில்லியனில் இருந்து 79,669 மில்லியனாக இருமடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 102% அதிகரிப்பு. இதேபோல், 2023-24 நிதியாண்டில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் 166% உயர்ந்துள்ளன. 2021-23 நிதியாண்டில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 9,806 மில்லியனில் இருந்து 26,035 மில்லியனாகக் கூடியிருக்கிறது.

Counterfeit ₹500 notes increase

ஆனால் அனைத்து ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 30% சரிவு ஏற்பட்டுள்ளது. 2018-19 நிதியாண்டில், 3,17,384 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது 2023-24 நிதியாண்டில் 2,22,639 ஆகக் குறைந்துள்ளது.

Real vs fake ₹500 notes

கள்ள நோட்டுகளுக்கு யார் வேண்டுமானாலும் பலியாகலாம். சில நேரங்களில் ஒரிஜினல் எது, கள்ள நோட்டு எது என்று வேறுபடுத்துவது கடினமாக இருக்கும். ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, அசல் 500 ரூபாய் நோட்டின் பண்புகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வது சரிபார்க்க உதவியாக இருக்கும். பின்வரும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டு, உண்மையான மற்றும் போலி 500 நோட்டுகளை எளிதாக அடையாளம் காண முடியும்.

RBI guidelines for ₹500 notes

ஒரு 500 ரூபாய் நோட்டின் அதிகாரப்பூர்வ அளவு 66 மிமீ x 150 மிமீ ஆகும். நோட்டில் "500" என்ற மதிப்பு தேவநாகரி மொழியில் அச்சிடப்பட்டிருக்கும். மகாத்மா காந்தியின் உருவப்படம் நடுவில் இருக்கும். 'பாரத்' மற்றும் 'இந்தியா' ஆகியவை மைக்ரோ எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும்.

Fake currency news India

நிறம் மாறும் பாதுகாப்பு இழை ஒன்று இருக்கும். இதைச் சாய்வாக வைத்துப் பார்த்தால் பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறும். மகாத்மா காந்தியின் உருவப்படத்தின் வலது பக்கத்தில் உத்தரவாத ஷரத்து, வாக்குறுதி ஷரத்து, ஆளுநரின் கையெழுத்து ஆகியவை இருக்கும்.

₹500 note security features

வாட்டர்மார்க்கில் மகாத்மா காந்தியின் உருவப்படம் இருக்கும். "500" என்ற மதிப்ப எலக்ட்ரோடைப் செய்யப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டின் வரிசை எண் (சீரியல் நம்பர்) கீழேயும் மேலேயும் இருக்கும். இந்த எண்கள் அளவில் சிறியதில் இருந்து பெரியதாகிக்கொண்டே போவது போல அச்சிடப்பட்டிருக்கும்.

Counterfeit banknotes in India

500 என்ற சின்னம் கீழே வலதுபுறத்தில் பச்சையிலிருந்து நீலமாக மாறுவது போல அச்சிடப்படும். வலதுபுறம் அசோகர் தூண் இருக்கும். நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு இடதுபுறத்தில் இருக்கும். 'ஸ்வச் பாரத்' (தூய்மை இந்தியா) இயக்கத்தின் லோகோ மற்றும் முழக்கம் இடம்பெற்றிருக்கும்.

click me!