மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.! இன்று ஒரு கிராமுக்கே இவ்வளவு உயர்ந்ததா.?

First Published | Nov 27, 2024, 9:37 AM IST

தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. இந்தியாவில் ரூபாய் மதிப்பு சரிவால் தங்கத்தின் விலை பெரிய அளவில் குறையவில்லை இருந்த போதும் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை சரிந்தத நிலையில் இன்று அதிகரித்துள்ளது

GOLD RATE

தங்கத்தின் மீதான முதலீடு

தங்கத்த்தின் மீதான ஆர்வம் மக்களுக்கு எப்போதும் குறைந்ததில்லை. அந்த வகையில் தங்கத்தின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அதிகளவு தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள். குறிப்பாக மற்ற நாடுகளை விட இந்திய மக்கள் தான் தங்கத்தின் மீது காதல் கொண்டுள்ளனர்.

திருமண நிகழ்வாக இருந்தாலும், விஷேச நிகழ்வுகளாக இருந்தாலும் அந்த இடத்தில் தங்கத்தின் பங்கு முக்கிய இடம் பிடிக்கும்.  மேலும் தங்கத்தில் முதலீடு செய்தற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. முதலாவதாக தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்பட்டதில்லை, 
 

GOLD RING

குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம்

கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எனவே குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் பார்க்கும் முதலீடாக தங்கம் உள்ளது. மேலும் தங்கத்தை வாங்கி வைப்பதன் மூலம் அவசர தேவைகளுக்கு தங்கத்தை விற்கவோ, அடகு வைக்கவோ உடனடியாக முடியும், இதுவே வீடு, நிலம், கார் என்று வாங்கும் போது மருத்து செலவு போன்ற அத்தியாவசிய தேவைக்கு உடனடியாக பயன்படுத்த முடியாது.

Latest Videos


jewellery

சர்வதேச அளவில் குறைந்த தங்கம் விலை

தங்கம் விலை சர்வதேச சந்தையில் பெரியளவில் சரிந்துள்ளது. ஆனால், இந்திய ரூபாய் மதிப்பும் சரிவதால் இந்தியாவில் அந்தளவுக்குத் தங்கம் விலை குறையவில்லை என கூறப்படுகிறது. மேலும் சர்வதேச சந்தையில் நேற்று தங்கம் விலை 3% குறைந்து இருந்தது. ஆனால், இந்தியாவில் அந்தளவுக்குக் குறையவில்லை. சர்வதேச சந்தையோடு ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களில் குறைவான அளவே இந்தியாவில் குறைந்துள்ளதாக கூறுகின்றனர்.

GOLD PRICE

அமெரிக்க அதிபரின் முடிவு என்ன.?

அதே நேரத்தில் அமெரிக்க புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டிரம்பின் பொருளாதார நடவடிக்கை காரணமாக தங்கத்தின் விலை உச்சத்தை தொடும் எனவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அடுத்த 18 மாதங்களில் ஒரு கிராம் தங்கம்  ரூ. 8500 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

TODAY GOLD PRICE

இன்றைய தங்கம் விலை என்ன.?

அந்த வகையில் நேற்று தங்கத்தின் விலை சரிவை சந்தித்தது. கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 7,080 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது. அந்த வகையில் 56ஆயிரத்து 840 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.
 

click me!