லாயல்டி உறுப்பினர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் மீது சிறப்பு தள்ளுபடிகள் கிடைக்கும். இங்கே தள்ளுபடி கிடைக்கும் என்று சொல்லலாம். மாணவர்கள், எஸ்எம்இக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மூத்த குடிமக்கள், ஆயுதப் படைகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் சிறப்பு தள்ளுபடி கட்டணத்தில் நிறுவனத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய தகுதியுடையவர்கள். சில நாட்களாக திருவிழா சீசன் பின்னணியில், பல விமான நிறுவனங்கள் இதுபோன்ற சிறப்பு விற்பனையை துவக்கி வருகின்றன. இண்டிகோ, விஸ்தாரா, ஸ்டார் ஏர், ஆகாஷா போன்ற பல நிறுவனங்களும் குறைந்த விலையில் விமானங்களை கொண்டு வந்துள்ளன. அதேபோல விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி, இண்டிகோ ஆட்-ஆன்ஸ் ஃபீஸ்டா என்ற தொகுப்பை அறிவித்துள்ளது. இதன் மூலம், பயணிகள் ஒரு மாதத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயணங்களில் 20 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.