தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது.
25
Gold Rate
இந்நிலையில் கடந்த ஜூலை 17-ம் தேதி வரை தங்கம் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை சரசரவென குறைந்து வந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.80 குறைந்து ரூ.53,640-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.10 குறைந்து ரூ.6,705க்கு விற்பனையானது.
45
Today Gold Rate
இன்றைய (செப்டம்பர் 13) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.6,825-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,280-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.58,240-ஆக விற்பனையாகிறது. ஒரே நாளில் சவரன் ரூ.960 உயர்ந்திருப்பது நகை வாங்குபவர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.
வெள்ளி விலை 3.50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.95.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.