Published : Jul 31, 2025, 11:11 AM ISTUpdated : Jul 31, 2025, 11:54 AM IST
பிரதமர் கிசான் சன்மான நிதித் திட்டத்தின் 20வது தவணையானது ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. 9.7 கோடி விவசாயிகளுக்கு ₹20,500 கோடி டிபிஎம் முறையில் வழங்கப்படும்.
விவசாயிகளுக்காக மத்திய அரசு தொடங்கிய பிரதமர் கிசான் சன்மான நிதித் திட்டமான பிஎம்-கிசான் (PM-KISAN) திட்டத்தின் 20வது தவணை ஆகஸ்ட் 2 ஆம் தேதி விடுவிக்கப்படுகிறது. வாரணாசியில் நடைபெறும் சிறப்புவிழாவில், பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக இந்த தவணையை தொடங்கி வைக்க உள்ளார்.
26
வங்கி கணக்கில் ரூ.6000
இந்த திட்டம் 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவியாக மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இதுவரை 19 தவணைகள் மூலம் ரூ.3.69 லட்சம் கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக பரிமாறப்பட்டுள்ளது. தற்போது 20வது தவணையில் மட்டும் 9.7 கோடி விவசாயர்களுக்கு ரூ.20,500 கோடி டிபிஎம் முறையில் அனுப்பப்படவுள்ளது.
36
உயர் மட்ட ஆலோசனை
இந்தத் தவணை வெளியீட்டை முன்னிட்டு, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் KVKs (வேளாண் அறிவியல் மையங்கள்), ICAR மற்றும் பல்வேறு வேளாண் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் மெய்நிகர் முறையில் கலந்து கொண்டு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அதிகபட்ச விவசாயிகள் இந்த நன்மையைப் பெறவேண்டும் என்பதற்காக, தேசியம் முழுவதும் பிரச்சாரம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண திட்டம் அல்ல; ஒரு இயக்கம் போலவும், திருவிழா போலவும் கொண்டாடப்படவேண்டும் என அமைச்சர் சௌஹான் வலியுறுத்தினார்.
56
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்
இந்த நிதி உதவி விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் பொருளாதார நிவாரணம் அளிக்கும் வகையில் செயல்படுகிறது. தற்போது நாட்டின் மிகப்பெரிய நேரடி பண பரிமாற்றத் திட்டங்களில் ஒன்றாக மாறியுள்ள பிஎம்-கிசான் திட்டம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முக்கியக் கருவியாக உருவெடுத்துள்ளது.
66
விவசாய உற்பத்தி அதிகரிக்கும்
ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்வில் விவசாயிகள் பங்கேற்று தங்களின் நலனுக்கான திட்டங்களை நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் இந்தத் திட்டம், எதிர்காலத்தில் மேலும் பல புதிய முன்னேற்றங்களுக்குத் தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.