புதுசா ஸ்மார்ட் போன் வாங்க போறீங்களா.! அப்போ உங்களுக்கு செம லக்.! தாறுமாறா விலை குறைய போகுது.!

Published : Jul 31, 2025, 09:22 AM IST

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு, இந்தியாவில் செல்போன் உற்பத்தியை அதிகரித்து, விலையை குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

PREV
16
டிரம்ப் வாயில் சக்கரை போடவேண்டும்

அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 25% வரி (டாரிஃப்) வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இது பார்க்க பெரும் கவலையாக தெரிந்தாலும், செல்போன், லேப்டாப், பிசி போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு இது முழுமையா வரவில்லை என்பதே உண்மை. அதாவது, இந்த சாதனங்களில் இருக்கும் சிப்கள் (Semiconductors) மீது மட்டும் தான் வரி வைக்கப்படும். இதனால் இந்தியாவுக்கே பல நன்மைகள் கிடைக்கப்போகுது. அதுவும் அடித்தட்டு மற்றும் நடுத்த வர்க்கத்தினர் பயன் அடையும் வகையில் ஸ்மார்ட் போன்கள் விலை குறையப்போகுது என்றால் ஹேப்பிதானே.! அதனால் கிராமங்களில் சொல்வதை போல டிரம்ப் வாயில் சக்கரை போடவேண்டும்

26
ஏன் இதனால் செல்போன் விலை குறையலாம்?

Apple, Samsung மாதிரி பெரிய நிறுவனங்கள் இப்போது சீனாவை விட்டுவிட்டு இந்தியா பக்கம் மாறியிருக்காங்க. இது இந்தியாவுக்குள்ள தொழிற்சாலைகள் அதிகமாக உருவாகும் பாக்கியத்தை தருகிறது. இனால், ஸ்மார்ட் போன்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டால், தயாரிப்பு செலவுகள் குறையும். இதனால் அதே போன்கள் நாம வாங்கும் விலையும் குறைவாகும்.

36
அமெரிக்கா வரிவிலக்கு – ஏற்றுமதி அதிகரிக்கும்

இந்தியா தயாரிக்கிற போன்கள் அமெரிக்காவுக்குச் செல்லும்போது வரிவிலக்கு இருப்பதால், இந்தியாவில் மேலும் அதிக உற்பத்தி செய்யப்படும். உற்பத்தி அதிகரிக்கும்போது, உள்நாட்டிலும் குறைந்த விலையில் விற்பனை செய்யலாம்.

46
வேலைவாய்ப்பு அதிகரிப்பு

இந்தியா முழுவதும் புதுப் தொழிற்சாலைகள் தொடங்குவதால், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இது மக்கள் வருமானத்தை உயர்த்தும்; அந்த வருமானத்திலேயே செல்போன் வாங்கும் திறன் அதிகரிக்கும்.

56
உள்நாட்டு போட்டி அதிகரிக்கும்

பல புதிய இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக தயாரிக்க ஆரம்பிக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் வாங்கும் சந்தையிலும் போட்டி உருவாகி, விலை குறைவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

66
அமெரிக்காவின் நிலைப்பாடு நமக்கான நல்லது

இப்போது அமெரிக்கா, இந்தியா தயாரிக்கும் மொபைல் சாதனங்களுக்கு வரி விதிக்காமல் விட்டிருப்பது, இந்திய தொழிற்துறைக்கு ஒரு பெரிய ஆதாயம் என்றால் அது மிகையல்ல. இந்த வாய்ப்பை இந்தியா சரியாக பயன்படுத்தினால், நாமும் குறைந்த விலையில் உயர்தர செல்போன்கள் வாங்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories