சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க வர்த்தக போர் மற்றும் பங்குச்சந்தை வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. சவரன் ரூ.64,000த்தைத் தாண்டிய பின் சிறிது குறைந்து தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே மற்ற நாடுகளை விட இந்திய மக்களை நகைகளை விரும்பி வாங்குகிறார்கள். சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது
24
தங்கத்தின் மீதான முதலீடு
. மேலும் அமெரித்த அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் வர்த்தக போர் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை விட தங்கத்தின் மீது முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுகிறார்கள். தங்கம் விலை கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக சவரனுக்கு ரூ.63,000 என்ற விலையை தொட்டது. அடுத்த 6 நாட்களில் பிப்ரவரி 11-ஆம் தேதி சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையைத் தாண்டியது.
34
நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏழை எளிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாதல் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழ்நிலையில் தான் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று முன் தினம் சரிவை சந்தித்தது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 120 ரூபாயும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து 63ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
44
இன்றைய தங்கம் விலை என்ன.?
இதனால் ஓரளவு நிம்மதி அடைந்த நகைப்பிரியர்களுக்கு அடுத்த நாளே ஷாக் கொடுத்தது தங்கம் விலை அதன் படி கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்து 7980 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து 63,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று அதிகரித்த தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 7990 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயருந்து 63ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.