எல்லாமே வெறும் 10 ரூபாயில்! சக்கை போடு போடும் அம்பானியின் அதிரடி வியாபாரம்!

Published : Feb 13, 2025, 09:50 PM ISTUpdated : Feb 13, 2025, 09:51 PM IST

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பல்வேறு பிராண்டுகள் வெறும் 10 ரூபாய்க்கு பல பொருட்களை விற்பனை செய்கின்றன. இந்த மலிவு விலையில் என்னென்ன பொருட்களை வாங்கலாம் என்பதைப் பார்ப்போம்.

PREV
15
எல்லாமே வெறும் 10 ரூபாயில்! சக்கை போடு போடும் அம்பானியின் அதிரடி வியாபாரம்!
Mukesh Ambani

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, வணிகத்தில் வல்லவர். வணிக சாம்ராஜ்யம் எரிசக்தி, தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை, பொழுதுபோக்கு எனப் பல தொழில்களை உள்ளடக்கியது.

ஆனால் தனித்துவமான விஷயம் என்னவென்றால், அவர் ஒரு சந்தையில் நுழையும் போதெல்லாம், நுகர்வோருக்கு மிகவும் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன. இப்போது முகேஷ் அம்பானி வணிக உலகில் உச்சத்தில் இருந்தாலும், ரூ. 10க்கு பல பொருட்களை வழங்குகிறார்! இந்த மலிவு விலையில் அவரது பிராண்டுகளிலிருந்து என்ன கிடைக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

 

25
Reliance Jio

முதலில் இந்தியாவின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு பிராண்டான ஜியோ. அறிமுகமானதில் இருந்து மிகவும் மலிவான திட்டங்களைத் தருகிறது. இதனால் வோடபோன் மற்றும் ஏர்டெல் போன்ற போட்டியாளர்கள் தங்கள் விலைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம் ரூ. 11 இல் தொடங்குகிறது.

35
Ambani FMCG brand

குளிர்பான சந்தையில், முகேஷ் அம்பானி, கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற போட்டியாளர்களின் விலையில் கிட்டத்தட்ட பாதி விலையில் காம்பா கோலாவை அறிமுகப்படுத்தினார். இந்த நடவடிக்கை குளிர்பானத் துறையை உலுக்கி இருக்கிறது.

காம்பா குளிர்பானம், ரசிகா குளுக்கோஸ் பானம் மற்றும் ஸ்பின்னர் விளையாட்டு பானம் ஆகியவை வெறும் ரூ. 10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பெரிய FMCG பிராண்டுகளுக்கே கடுமையான போட்டியாக மாற்றியுள்ளது.

45
Reliance Consumer Products

ரிலையன்ஸ் சில்லறை விற்பனைக் கடைகளில் பல விதமான பிஸ்கட் மற்றும் ஸ்னாக்ஸ் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அனைவருக்கும் தினசரி அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன.

55
Reliance Retail

முகேஷ் அம்பானியின் இந்த உத்தி வெறும் பொருட்களை விற்பனை செய்வது மட்டுமல்ல. இந்த அணுகுமுறை குறைந்த விலையில் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் கிடைக்க வழிவகை செய்கிறது. தொலைத்தொடர்பு, குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் அனைத்தும் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories