EPFO Alert: ஒரு நிறுவனத்திலிருந்து விலகிய பிறகு பிஎப் தொகையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இபிஎஸ் சேவை காலம் பழைய உறுப்பினர் ID-யுடன் இணைந்தே இருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
வேலை மாறும் ஊழியர்களில் பெரும்பாலானோர் புதிய நிறுவனத்தில் சேரும் போது பிஎப் கணக்கை மட்டுமே கவனிக்கிறார்கள். ஆனால் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (இபிஎஸ்) சேவை தொடர்பான காலப் பதிவுகளை மாற்ற மறந்து விடுகின்றனர். இது சிறிய விஷயமாக தோன்றினாலும், எதிர்கால பென்ஷன் பலன்களை நேரடியாக பாதிக்கக்கூடியது.
25
பென்ஷன் சேவை தானாக மாறாது
ஒரு நிறுவனத்திலிருந்து விலகிய பிறகு பிஎப் தொகையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இபிஎஸ் சேவை காலம் பழைய உறுப்பினர் ID-யுடன் இணைந்தே இருக்கும். அந்த சேவை பதிவை புதிய நிறுவனத்தின் பிஎப் கணக்கிற்கு மாற்றவில்லை என்றால், முந்தைய பணிக்காலம் பென்ஷன் கணக்கீட்டில் சேர்க்கப்படாமல் போகலாம்.
35
ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன?
பென்ஷனுக்கான தகுதி காலம் குறையலாம். மாதாந்திர பென்ஷன் தொகையும் பாதிக்கப்படலாம். குறிப்பாக பல நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் சேவை கால பதிவுகளை சரியாக இணைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் தேவையற்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
UAN எண்ணுடன் இபிஎப்ஓ போர்ட்டலில் உள்நுழைந்து, 'ஆன்லைன் சேவைகள்' பிரிவில் உள்ள 'ஒரு உறுப்பினர் - ஒரு Eபிஎப் கணக்கு' வசதியைப் பயன்படுத்தலாம். பழைய உறுப்பினர் ஐடி விவரங்களை உள்ளிட்டு, பழைய அல்லது தற்போதைய நிறுவனத்தின் ஒப்புதலுடன் மாற்றக் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை பதிவுசெய்து விண்ணப்பத்தை நிறைவு செய்ய வேண்டும்.
55
இன்றே சரிபாருங்கள்
ஓய்வுக்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புபவர்கள், வேலை மாறும் ஒவ்வொரு முறையும் பிஎப் மற்றும் இபிஎஸ் சேவை பதிவுகள் சரியாக மாற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சிறிய அலட்சியம், எதிர்கால பென்ஷன் வருமானத்தில் பெரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.