RBI Credit Score Rules: 730-க்கு கீழ் சிபில் ஸ்கோர் இருக்கா? கடன் வாங்குவது கனவாகிவிடுமா? ஆர்பிஐ அதிரடி

Published : Jun 12, 2026, 05:39 PM IST

RBI Credit Score Rules: இதுவரை தவறிய பிறகே நடவடிக்கை எடுத்த வங்கிகள், இனி தவறு நடப்பதற்குமுன் அபாயத்தை கணிக்க உள்ளன. ஆர்பிஐயின் புதிய ECL கட்டமைப்பு, கோடிக்கணக்கான கடன் விண்ணப்பதாரர்களின் எதிர்காலத்தை மாற்றக்கூடும்.

PREV
15
கடன் வாங்குபவர்களுக்கு புதிய எச்சரிக்கை

கடன் வாங்க திட்டமிட்டு இருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு முக்கியமான மாற்றம் வரவுள்ளது. ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு (ECL) கட்டமைப்பு, வங்கிகளின் கடன் வழங்கும் முறையையே மாற்றக்கூடியதாக பார்க்கப்படுகிறது. 2027 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விதிகள், குறிப்பாக குறைந்த சிபில் ஸ்கோர் உள்ளவர்களை நேரடியாக பாதிக்கலாம்.

25
நடப்பதற்கு முன்பே கண்காணிப்பு

தற்போதைய முறையில், கடன் தவணை செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்ட பிறகே வங்கிகள் அபாயத்தை மதிப்பிடுகின்றன. ஆனால் புதிய ECL முறை, எதிர்கால அபாயத்தை முன்கூட்டியே கணிக்க உதவும். இஎம்ஐ தாமதம், வருமானத்தில் நிலைத்தன்மையின்மை, அதிகரிக்கும் கிரெடிட் பயன்பாடு போன்ற காரணிகள் கடன் தகுதியை தீர்மானிக்க முக்கியம்.

35
730-க்கு கீழ் சிபில் இருந்தால் என்ன நடக்கும்?

வங்கி துறையில் வெளியாகும் மதிப்பீடுகளின்படி, 730-க்கு குறைவான சிபில் ஸ்கோர் பெற்றவர்களுக்கு கடன் பெறுவது சவாலாக மாறலாம். அதிக வட்டி விகிதம், கூடுதல் ஆவணங்கள், அடமானம் கோருதல் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படலாம். சில நேரங்களில், விண்ணப்பங்கள் நேரடியாக நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

45
உயர்ந்த கிரெடிட் ஸ்கோருக்கு கூடுதல் சலுகைகள்

730-க்கு மேல் சிபில் ஸ்கோர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் வங்கிப் பட்டியலில் இடம்பிடிக்கலாம். போட்டித்தன்மை கொண்ட வட்டி விகிதங்கள், சிறப்பு சலுகைகள் மற்றும் பல்வேறு நிதி தயாரிப்புகள் அவர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடும்.

55
இப்போதே என்ன செய்ய வேண்டும்?

கடன் பெற திட்டமிடுபவர்கள் தங்களின் சிபில் ஸ்கோரை சீராக பராமரிப்பது அவசியம். இஎம்ஐ-களை சரியான நேரத்தில் செலுத்துதல், தேவையற்ற கடன் விண்ணப்பங்களைத் தவிர்த்தல் மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாடு போன்றவை எதிர்கால கடன் வாய்ப்புகளைப் பாதுகாக்க உதவும். புதிய விதிகள் இந்த அமலுக்கு வராத நிலையில் இருந்தாலும், நல்ல கிரெடிட் பழக்கவழக்கங்களை இப்போதே தொடங்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories