அவசர செலவா? உங்கள் பிஎஃப் பணத்தில் ரூ. 1 லட்சம் வரை பெறலாம்.. ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

Published : Aug 10, 2024, 05:01 PM IST

இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு அவசர செலவுகளுக்கு பிஎஃப் பணத்தில் இருந்து அட்வான்ஸ் தொகை பெற முடியும். இந்த தொகையின் தகுதி வரம்பு தற்போது உயர்ந்தப்பட்டுள்ளது.

PREV
17
அவசர செலவா? உங்கள் பிஎஃப் பணத்தில் ரூ. 1 லட்சம் வரை பெறலாம்.. ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
Epfo

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இபிஎஃப் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிஎஃப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட தொகையும், பணியாளர் சார்பில் குறிப்பிட்ட தொகையும் மாதம் மாதம் பிடித்தம் செய்யப்படுகிறது.

27
Epfo

பிஎஃப் மூலம் ஓய்வு காலத்தில் நிதியுதவு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அதன்படி இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு அவசர செலவுகளுக்கு பிஎஃப் பணத்தில் இருந்து அட்வான்ஸ் தொகை பெற முடியும். இந்த தொகையின் தகுதி வரம்பு தற்போது உயர்ந்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ரூ.50,000 லிருந்து ரூ.1 லட்சம் வரை கிடைக்கும். பிஎஃப் பயனாளர்கள் திடீரென ஏற்படும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான செலவுகளை நிர்வகிக்க உதவும்.

37
Epfo

மேலும் வீடு கட்டுவது, மருத்துவம், கல்வி அல்லது திருமணம் ஆகியவற்றிற்கான தானியங்கி முறையில் தீர்வுக்கான விதிகளை இபிஎஃப்ஓ எளிமைப்படுத்தியுள்ளது இந்தியாவில் இருக்கும் சுமார் 6 கோடி பிஎஃப் பயனர்கள் இதன் மூலம் பயன்பெற முடியும். 

47
Epfo

இதற்கு முன்பு வரை, தகுதி நிலை, KYC நிலை, வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற உறுப்பினர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதால், பிஎஃப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு சுமார் 15-20 நாட்கள் ஆகும், ஆனால் இப்போது தானியங்கி அமைப்பு மூலம் 3 - 4 நாட்களுக்குள் பணத்தை பெற முடியும்.

57
Epfo

அதே போல் பழைய விதிகளின் படி மருத்துவ செலவுகளுக்கு மட்டுமே பணம் பெற முடியும். ஆனால் தற்போது ஆட்டோ-மோட் செட்டில்மென்ட் வசதி மூலம், ​​கல்வி, வீட்டு வசதி அல்லது திருமணம் போன்றவற்றிற்காக உறுப்பினர்கள் இப்போது பிஎஃப் தொகையில் இருந்து அட்வான்ஸ் பெறலாம். மேற்கூறிய காரணங்களுக்காக பிஎஃப் பயனர்கள் ரூ.1 லட்சம் வரை கோரலாம். 

67
Epfo

பிஎஃப் அட்வான்ஸ் தொகையை எப்படி பெறுவது?

உங்கள் கடவுச்சொல் மற்றும் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) பயன்படுத்தி EPFO ​​போர்ட்டலில் உள்நுழைய வேண்டும். பின்னர் Online service என்ற பிரிவில் சென்று 'claim' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணக்கு விவரங்களைச் சரிபார்த்து, ''Proceed for online claim; என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும். 'PF முன்கூட்டியே படிவம் 31' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்,

 

77
Epfo

'PF advance form 31'. என்பதை தேர்ந்தெடுத்து, முன்கூட்டிய கோரிக்கைக்கான காரணம், முகவரி போன்ற தொடர்புடைய விவரங்களை நிரப்பவும். உங்கள் காசோலை புத்தகம் அல்லது பாஸ்புக்கின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை நீங்கள் பதிவேற்ற வேண்டும்.  உங்கள் ஒப்புதலை வழங்கவும், அதை உங்கள் 'ஆதார் அட்டை' மூலம் சரிபார்க்கவும். அதுவே உங்கள் நிறுவனத்திடம்  ஒப்புதலுக்காகச் செல்லும். ஆன்லைன் சேவைகள் மூலம் உரிமைகோரல் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம். 

click me!

Recommended Stories