பெண்களுக்கு மட்டும் இந்த சூப்பர் திட்டம்! வெறும் 1000 டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

Published : Aug 10, 2024, 04:09 PM IST

பெண்களுக்கு நிதி பாதுகாப்புக்கான உத்தரவாதத்துடன் அதிக லாபத்தையும் கொடுக்கும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

PREV
15
பெண்களுக்கு மட்டும் இந்த சூப்பர் திட்டம்! வெறும் 1000 டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!
Mahila Samman Saving Certificate

நாட்டில் அனைத்து பெண்களுக்கும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய நிதியமைச்சகம் சார்பில் வழங்கப்படுவதுதான் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்.  இந்தத் திட்டம் போஸ்ட் ஆபீஸ்கள் மறுறம் சில தகுதியான வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

25
Mahila Samman Savings in Post Office

பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளைத் தேடும் பெண்கள் இந்தத் திட்டத்தில் தங்கள் பணத்தைச் சேமிக்கலாம். சிறுமிகளும் இத்திட்டத்தில் சேர முடியும். இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யும் தொகைக்கு ஆண்டுதோறும் 7.5% வட்டி கிடைக்கும்.

35
Mahila Samman Savings Scheme

இந்த சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இரண்டு ஆண்டு காலத்திற்கு 7.5% வட்டியுடன் முதிர்வுத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

45
Mahila Samman Savings Savings

இந்திய குடியுரிமை உள்ள பெண்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் சேரலாம். பெண் குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தையின் பெயரில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

55
Mahila Samman Savings Account

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் இணைவதற்கு என்று வயது வரம்பு ஏதும் கிடையாது. பெண்கள் எந்த வயதிலும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் தொடங்கும் கணக்கு தனி கணக்காக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories