எனவே பிஎஃப் உறுப்பினர்கள் சில அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவது அவசியம். தெரியாத குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது சமூக ஊடக இணைப்புகளைத் திறக்காமல் இருப்பது, இணையதள முகவரி சரிபார்ப்பது, உறுப்பினர் விவரங்கள், ஆதார், நிரந்தர கணக்கு எண், வங்கி தகவல்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணை யாரிடமும் பகிராமல் இருப்பது முக்கியமானவை. சந்தேகத்திற்கிடமான இணையதளம் அல்லது மோசடி முயற்சியை எதிர்கொண்டால், உடனடியாக உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும். பிஎஃப் சேவைகளைப் பயன்படுத்தும்போது சில நிமிடங்கள் கூடுதல் கவனம் செலுத்துவது, பெரிய நிதி இழப்பைத் தவிர்க்க உதவும்.