UPI transactions
ஒரு காலத்தில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்ப வேண்டும் என்றால், வங்கிக்குச் செல்ல வேண்டும். இப்போது எல்லாமே எளிமையாகிவிட்டது. UPI மூலம் சில நொடிகளில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
UPI PIN
UPI பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக வைத்திருக்க பிரத்யேகமான PIN நம்பர் இருக்கும். இது உங்கள் UPI பேமெண்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் 4 முதல் 6 இலக்கங்கள் கொண்ட குறியீடாகும். இது பரிவர்த்தனைக்கான அங்கீகாரத்தை வழங்கும் பாஸ்வேர்டு போல செயல்படுகிறது. இது டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.
UPI PIN Reset using Debit Card
ஆன்லைனில் சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பாஸ்வேர்டுகளை அவ்வப்போது மாற்ற வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதேபோல UPI பின் நம்பரையும் அவ்வப்போது மாற்ற வேண்டும். பொதுவாக, புதிய UPI PIN ஐ உருவாக்க டெபிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
UPI PIN Setup with Aadhaar OTP
டெபிட் கார்டு இல்லாத நேரத்தில் UPI பின் நம்பரை எப்படி மாற்றுவது? அதற்கு சுலபமான மாற்று வழி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதார் கார்டு போதும். வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். அப்போது, டெபிட் கார்டு இல்லாமலே, ஆதார் எண்ணை பயன்படுத்தி, UPI PIN ஐ மாற்றலாம். UPI மொபைல் ஆப் ஒன்றில் PIN ஐ மாற்றும் ஆப்ஷனுக்குச் சென்று, ஆதார் அட்டை மூலம் PIN மாற்றம் செய்யும் முறையைத் தேர்வு செய்யவும்.
Resetting UPI PIN using Aadhaar
உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 6 இலக்கங்களை அதற்குரிய இடத்தில் டைப் செய்து, ஆதார் OTP என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது, ஆதார் மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP கிடைக்கும். அதை டைப் செய்ததும், புதிய UPI PIN ஐ உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். இரண்டு முறை புதிய பின் நம்பரை சரியாக டைப் செய்து உறுதிப்படுத்தவும். உங்கள் UPI PIN மாற்றப்பட்ட செய்தி எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
UPI Payment Security
UPI PIN ஐ உருவாக்க ஆதார் அட்டையைப் பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது. அதே சமயத்தில் உங்கள் UPI PIN நம்பரை யாரிடமும் வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வலுவான, தனித்துவமான PIN ஐ உருவாக்குவது உங்கள் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடும்.