PF கணக்கில் இருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம்? விதிமுறைகள் என்னென்ன?

Published : Mar 19, 2025, 10:07 AM ISTUpdated : Mar 21, 2025, 08:59 AM IST

வருங்கால வைப்பு நிதி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணம், அவசரப் பணத்தேவை ஏற்படும்போது பயனுள்ளதாக இருக்கும். ஆனால், PF பணத்தை எடுப்பதற்கு EPFO ​​சில விதிகளை உருவாக்கியுள்ளது. அதன்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து எப்போது பணம் எடுக்கலாம், ​​எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதை இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
15
PF கணக்கில் இருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம்? விதிமுறைகள் என்னென்ன?

நீங்கள் ஒரு நிறுவனம் அல்லது தொழிற்சாலையில் பணிபுரிகிறார்களா? உங்கள் வருவாயில் ஒரு பகுதி உங்கள் PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டால், அந்தப் பணம்  நிதி நெருக்கடி காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். தொழிலாளர் வருங்கால வைப்பநிதி அமைப்பு (EPFO) ​​PF கணக்கு தொடர்பான அனைத்து விதிகளையும் உருவாக்குகிறது. அதன்படி, உங்கள் PF கணக்கிலிருந்து எப்போது, ​​எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதை இத்தொகுப்பில் அறியலாம்.

25

ஒரு ஊழியர் தனது PF தொகையில் எத்தனை சதவீதத்தை எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்ளலாம், இதில் எந்தெந்த காரணிகள் செயல்படுகின்றன என்பது குறித்து EPFO ​​விதிகளை உருவாக்கியுள்ளது.

வேலையின்மை, பணநீக்கம், பணி ஓய்வு என வெவ்வேறு காரணங்களின் அடிப்படையில் பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

35
EPFO withdrawal

வேலையின்மை

ஒரு ஊழியர் ஏதேனும் காரணத்தால் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலையிலிருந்து விலகி இருந்தால், அவர் தனது பிஎஃப் கணக்கிலிருந்து 75 சதவீத தொகையை எடுக்கலாம்.

நிறுவனம் 6 மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தால்

ஊழியர் பணிபுரியும் நிறுவனம் 6 மாதங்களுக்கு மூடப்பட்டால், PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட முழுத் தொகையையும் திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் நிறுவனம் அல்லது தொழிற்சாலை மீண்டும் தொடங்கும்போது, ​​ஊழியர் தனது சம்பளத்துடன் PF-ல் இருந்து எடுக்கப்பட்ட தொகையை 36 தவணைகளில் திரும்பிச் செலுத்த வேண்டும்.

45
EPFO rules

பணிநீக்கம்

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டால், அவருக்கும் PF-ல் இருந்து பணம் எடுக்க வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில், ஊழியர் PF கணக்கிலிருந்து 50 சதவீதம் வரை பணத்தை எடுக்கலாம்.

அவசர காலத்தில்

அவசரகாலத்தில் நிறுவனம் 15 நாட்களுக்கு மூடப்பட வேண்டியிருந்தால், ஊழியர் தனது பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 100 சதவீதம் வரை பணத்தை எடுக்கலாம்.

55
EPFO pension

ஓய்வூதியத் திட்டம்

ஓய்வுக்குப் பிறகு இரண்டு வழிகளில் PF-லிருந்து பணத்தை எடுக்க EPFO ​​ஊழியர்களுக்கு விருப்பத்தை வழங்குகிறது. முதல் வாய்ப்பு என்னவென்றால், பணியாளர் ஓய்வுக்குப் பிறகு முழு PF தொகையையும் ஒரே நேரத்தில் எடுக்கலாம். இது தவிர, EPS ஓய்வூதியத் தொகையாகவும் பெறலாம். அதாவது, PF கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு தொகை பென்ஷனாகக் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories