Post Office Scheme: பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு, போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் (TD) திட்டம் ஒரு சூப்பர் சாய்ஸ். வங்கி FD-க்களை விட அதிக வட்டி, 100% அரசு உத்தரவாதம் என பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. இது குறித்து பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ் வழங்கும் டைம் டெபாசிட் திட்டத்தில், நீங்கள் 1 வருடம் முதல் 5 வருடம் வரை பணத்தை டெபாசிட் செய்யலாம். இந்த காலத்துக்கு ஒரு நிலையான வட்டி கிடைக்கும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் இதை பாதிக்காது என்பதால், இது ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் தனிநபர் அல்லது ஜாயிண்ட் அக்கவுன்ட் மூலமாகவும் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 3 பேர் சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுன்ட் திறக்க முடியும்.
25
வட்டி விகிதங்கள் எப்படி இருக்கு?
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், முதலீட்டு காலத்தைப் பொறுத்து வட்டி விகிதங்கள் மாறும்.
* 1 வருட டெபாசிட்டுக்கு – 6.9%
* 2 வருட டெபாசிட்டுக்கு – 7.0%
* 3 வருட டெபாசிட்டுக்கு – 7.1%
* 5 வருட டெபாசிட்டுக்கு – 7.5%
குறிப்பாக, 5 வருட டெபாசிட்டுக்கான 7.5% வட்டி என்பது அனைவருக்கும் பொருந்தும். பொதுவாக, வங்கிகள் இந்த அளவு அதிக வட்டியை சீனியர் சிட்டிசன்களுக்கு மட்டுமே வழங்கும்.
35
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?
இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.1,00,000-ஐ 3 வருடங்களுக்கு முதலீடு செய்தால், மெச்சூரிட்டி சமயத்தில் உங்களுக்கு மொத்தம் ரூ.1,23,508 கிடைக்கும். அதாவது, வட்டியாக மட்டும் ரூ.23,508 லாபம் பார்க்கலாம். இது முற்றிலும் ரிஸ்க் இல்லாத முதலீடு. உங்கள் பணத்துக்கு முழு அரசு உத்தரவாதம் இருப்பதால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு வெறும் ரூ.1,000 தான். அதிகபட்ச முதலீட்டுக்கு எந்த வரம்பும் இல்லை. அதனால், சிறிய தொகையில் ஆரம்பித்து எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். தேவைப்பட்டால், 6 மாதங்களுக்குப் பிறகு பணத்தை முன்கூட்டியே எடுக்கும் (pre-mature withdrawal) வசதியும் உண்டு. ஆனால், அப்படி எடுக்கும்போது வட்டி சற்று குறைய வாய்ப்புள்ளது.
55
இந்த திட்டத்துக்கு ஏன் டிமாண்ட் அதிகமாகிறது?
தற்போது பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்ற முதலீடுகளில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக உள்ளன. இந்த மாதிரி நேரத்தில், போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் நிலையான வருமானம் தரும் ஒரு பாதுகாப்பான வழியாக மாறியுள்ளது. 100% அரசு பாதுகாப்பு, வங்கி FD-க்களை விட அதிக வட்டி, ரூ.1000-ல் தொடங்கும் வசதி, 1 முதல் 5 வருட முதலீட்டு தேர்வுகள், 5 வருட டெபாசிட்டுக்கு பிரிவு 80C-யின் கீழ் வரி விலக்கு என பல நன்மைகள் இதில் உள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.