வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து கொள்ள வேண்டும். சந்தை விலைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மூலப்பொருட்கள், செலவுகள் இப்படி.. ஐஸ்கிரீம் கோன்கள், கப்கள் தயாரிக்க முக்கியமாகத் தேவைப்படுபவை மைதா, சர்க்கரை, நெய், பால் பொருட்கள், சுவைக்கூட்டு சாறுகள். இவற்றை சந்தையில் மொத்தமாக வாங்க வேண்டும். இதனால் முதலீட்டுத் தொகை குறையும். கோன்கள், கப்கள் தயாரித்த பிறகு, பொதி செய்யும் செலவு சுமார் ரூ.5 முதல் ரூ.15 வரை இருக்கும். இவை தவிர மின்சாரம், தண்ணீர், பணியாளர்களின் சம்பளம் போன்ற செலவுகள் இருக்கும்.
இயந்திரங்கள், கருவிகள் | ஐஸ் கிரீம் கோன் தயாரிக்க கோன் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்க வேண்டும். நீங்கள் வாங்கும் இயந்திரம் சில நொடிகளில் பல கோன்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். குளிர்பதன சாதனங்கள், பொதி இயந்திரங்களும் தேவைப்படும். ஐஸ் கிரீம் கோன் தயாரிப்பு, கப்கள் தயாரிக்க சிறிய அளவிலான இயந்திரங்கள் ரூ.2 லட்சத்தில் இருந்து கிடைக்கின்றன. அதிக திறன் கொண்ட இயந்திரங்கள் ரூ.10 லட்சம் வரை இருக்கும். தயாரிப்பை சேமித்து வைக்க சேமிப்பு அலகுகளை அமைக்க வேண்டும். அவற்றுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவாகும்.